சளி உருவாவதை கட்டுப்படுத்தும் மந்திர பானம்!! முழு பலன் கிடைக்க 3 வேளை மட்டும் குடிங்க!!

Photo of author

By Divya

தற்பொழுது பனி காலம் என்பதால் சளி,இருமல் போன்ற பாதிப்புகள் பாரபட்சம் இன்றி அனைவருக்கும் ஏற்படுகிறது.சிலருக்கு நாள்பட்ட சளி பாதிப்பால் தொண்டை மற்றும் மார்பு பகுதியில் கெட்ட வாடையுடன் சளி வெளியேறும் பிரச்சனை இருக்கும்.இந்த பாதிப்பு இருப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திர பானத்தை தொடர்ந்து பருகி வந்தால் உரிய நிவாரணம் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
2)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

**ஒரு பாத்திரத்தை எடுத்து 150 மில்லி தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்திக் கொள்ளவும்.

**பிறகு இந்த சூடான நீரை ஒரு கிளாஸிற்கு ஊற்றிக் கொள்ளவும்.பிறகு ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாறை வெந்நீரில் பிழிந்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும்.

**பிறகு ஒரு தேக்கரண்டி அளவு தேனை அதில் ஊற்றி நன்கு கலந்து பருகினால் சளி தொந்தரவு அகலும்.

தேவையான பொருட்கள்:-

1)மிளகு – நான்கு
2)இஞ்சி – ஒரு துண்டு
3)தேன் – ஒரு தேக்கரண்டி
4)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

**முதலில் கருப்பு மிளகை உரலில் போட்டு கொரகொரப்பாக இடித்து வைத்துக் கொள்ளவும்.உரல் இல்லாதவர்கள் மிக்சர் ஜாரில் போட்டு பொடித்து வைத்துக் கொள்ளவும்.

**அடுத்து ஒரு துண்டு இஞ்சை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டாக நறுக்கி கொள்ளவும்.அதன் பின்னர் பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து ஒன்றரை கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும்.

**பிறகு இடித்த மிளகுத் தூளை அதில் கொட்டிக் கொதிக்க வைக்கவும்.அடுத்து நறுக்கிய இஞ்சி துண்டுகளை போட்டு கொதிக்க வைக்கவும்.

**மிளகு மற்றும் இஞ்சி துண்டுகள் நன்கு கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு ஒரு கிளாஸிற்கு இந்த பானத்தை வடிகட்டி கொள்ளவும்.

**பிறகு இந்த பானத்தில் ஒரு தேக்கரண்டி அளவு தேன் சேர்த்து கலக்கி பருகி வந்தால் மார்பு சளி பாதிப்பு முழுமையாக குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)ஆப்பிள் சீடர் வினிகர் – ஒரு தேக்கரண்டி
2)வெந்நீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

**முதலில் ஒரு கிளாஸ் நீரை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்தவும்.தண்ணீர் நன்கு சூடானதும் இதில் ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து பருகி வந்தால் சளி உருவாவது கட்டுப்படும்.