நாம் மறந்து வரும் பாரம்பரிய மூலிகைகளில் ஒன்று சிறுகண் பீளை.இந்த செடியின் இலை,பூ,வேர் என்று அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த சிறுகண் பீளை பூ நீர்க்கடுப்பு,கல்லடைப்பு,சிறுநீரக தொற்றுக்களை குணப்படுத்தும் மருந்தாக திகழ்கிறது.
அதேபோல் சிறுகண் பீளையின் வேரை அரைத்து பாலில் கலந்து பருகி வந்தால் கருப்பை சம்பந்தப்பட்ட பாதிப்புகள் குணமாகும்.சிறுகண் பீளை வேர் மாதவிடாய் காலத்தில் பெண்கள் சந்திக்கும் வயிற்று வலி,அதிக உதிரப்போக்கு போன்றவற்றிற்கு அருமருந்தாக திகழ்கிறது.இந்த சிறுகண் பீளை வேரில் கசாயம் செய்து பருகி வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
தேவையான பொருட்கள்:
1)சிறுகண்பீளை செடியின் வேர் – ஒரு கைப்பிடி
2)சாதம் வடித்த கஞ்சி – ஒரு கப்
3)உப்பு – சிறிதளவு
செய்முறை விளக்கம்:
முதலில் சிறுகண் பீளை செடியை வேரோடு சேகரித்து வாருங்கள்.இதில் சிறுகண் பீளை பூவை உதிர்த்து பொடித்து சிறுநீரக கல்லடைப்பு பாதிப்பிற்கு மருந்தாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
அடுத்து சிறுகண் பீளை வேரை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
இதை வெயிலில் நன்கு காய வைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்து ஜல்லடை கொண்டு சலித்துக் கொள்ளுங்கள்.
பிறகு சாதம் வடித்த கஞ்சியை ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் கொள்ளுங்கள்.இப்பொழுது அரைத்து வைத்துள்ள சிறுகண் பீளை வேர் பொடி ஒரு தேக்கரண்டி அளவிற்கு கலந்து கொள்ளுங்கள்.
அடுத்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து பருகி வந்தால் மாதவிடாய் நேரத்தில் அதிக உதிரப்போக்கு ஏற்படுவது கட்டுப்படும்.
தேவையான பொருட்கள்:
1)சிறுகண் பீளை வேர் பொடி – ஒரு தேக்கரண்டி
2)பால் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:
சிறுகண் பீளையின் வேரை காயவைத்து பொடித்து வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு ஒரு கிளாஸ் பாலை பாத்திரத்தில் ஊற்றி சூடுபடுத்துங்கள்.
பால் கொதி வரும் நேரத்தில் அரைத்த சிறுகண் பீளை பொடி ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்து கொதிக்க வைத்து பருகினால் கருப்பை சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்.