இவங்க படத்துக்கு இசையமைக்க சம்பளம் வாங்க மாட்டேன்!!2 படங்களுக்கு இலவசமாக பாட்டமைத்த யுவன்!!

Photo of author

By Gayathri

இவர் அதிக அளவு பாடல்களை இசையமைக்க வில்லை என்றாலும் இவர் இசையமைத்த பாடல்களுக்கு என தனி ரசிகர் படையை கொண்டவர் என்பதில் எந்தவிதாயமும் இல்லை. யூத் ஐகான் என்ற பட்டம் பெற்ற ஒரே இசையமைப்பாளர் இவரே. அதிலும் குறிப்பாக 2006 ஆம் ஆண்டு ராம் திரைப்படத்தின் இசைக்காக சைப்ரஸ் சர்வதேச திரைப்பட விழாவில் விருதை வென்ற ஒரே இந்திய இசையமைப்பாளர் என்ற பெருமையை தட்டிச்சென்ற பெருமைமிக்க இசையமைப்பாளர் இவரே.

பொதுவாக இவர் ஒரு பாடலை இசையமைத்துக் கொடுப்பதற்கு பல மாதங்கள் எடுத்துக் கொள்வதாகவும் இவரை பின்தொடர்ந்து பாடல்களை பெறுவதென்பது மிகப்பெரிய வேலையாக இருக்கும் என்றும் பல இயக்குனர்கள் இவரை தவிர்த்து விடுவதாகவும் கூறப்படுகிறது. இப்படி இருக்கும் சூழலில் இசையமைப்பாளர் தினம் சங்கர் ராஜா அவர்கள் இரண்டு படங்களுக்கு சம்பளமே வாங்காமல் இசை அமைத்துக் கொடுத்திருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாத விஷயமாகவே உள்ளது.

யுவன் சங்கர் ராஜா சம்பளம் பெறாமல் இசையமைத்துக் கொடுத்த முதல் படம் ” சென்னை 28 ” :-

வெங்கட் பிரபுவின் உடைய இந்த திரைப்படத்திற்கு இசையமைத்த யுவன் சங்கர் ராஜா அவர்கள் இத்திரைப்படம் தன்னுடைய சகோதரரின் முதல் திரைப்படம் என்ற காரணத்திற்காக சம்பளம் பெறாமல் இசையமைத்து கொடுத்திருக்கிறார்.

யுவன் சங்கர் ராஜா சம்பளம் பெறாமல் இசையமைத்துக் கொடுத்த இரண்டாவது படம் சரோஜா :-

இந்த திரைப்படமும் யுவன் சங்கர் ராஜா அவர்களின் சகோதரரான வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவானது. இந்த காரணம் மட்டுமின்றி குறிப்பாக இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் டி சிவா அவர்கள் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை முதன் முதலில் தமிழ் சினிமா துறையில் அறிமுகம் படுத்தினார் என்ற காரணத்திற்காக திரைப்படத்திற்கு யுவன் அவர்கள் சம்பளம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தது.