தமிழ் சினிமா துறையை பொறுத்தவரை மூவேந்தர்கள் என அழைக்கப்படுபவர்கள் எம்ஜிஆர், சிவாஜி கணேசன் மற்றும் ஜெமினிகணேசன் ஆவர். இவர்கள் வாழ்ந்த காலகட்டங்களான 60 70களிலேயே முப்பெரும் தேவிகள் என அழைக்கப்படும் மூன்று நடிகைகள் சினிமா ராஜ்ஜியத்தை ஆண்டது எத்தனை பேருக்கு தெரியும் ? அவர்கள் குறித்து இந்த பதிவில் காண்போம்.
பத்மினி :-
” நாட்டிய பேரொளி ” என சிறப்பு பெயர் பெற்ற பத்மினி அவர்கள் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தியவர் ஆவார். 60, 70 காலகட்டங்களில் இத்தனை மொழிகளில் திரைப்படம் நடிப்பது மற்றும் ஆதிக்கம் செலுத்துவது என்பது அசாதாரண காரியம் அல்ல.
சாவித்திரி :-
சசிகலா ராணி என்ற இயற்பெயர் கொண்ட நடிகை சாவித்ரி அவர்கள் எம்ஜிஆர் சிவாஜி கணேசன் என அக்காலகட்டத்தில் உச்ச நடிகர்களாக இருந்த அனைவருடனும் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். மேலும் இவர் இசை மற்றும் நடனம் இரண்டிலும் சிறந்து விளங்கியவர். இவ்வாறு சிறப்பு பெற்றவர் 1952 ஆம் ஆண்டு ஜெமினி கணேசனை திருமணம் செய்து கொண்டார்.
சரோஜாதேவி :-
முப்பெரும் தேவிகளில் மூன்றாவது தேவியாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் சரோஜாதேவி அவர்கள். முதலில் கன்னட மொழியின் மூலம் அறிமுகமாகி அதன் பின், தமிழ் தெலுங்கு என வேற்று மொழிகளில் நடிக்க தொடங்கினார். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக சினிமா துறையில் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருபவர் சரோஜாதேவி என்பதில் எந்த ஆயமும் இல்லை.
நடிகர்களைப் போலவே நடிகைகளும் அனைத்திலும் சிறந்து விளங்கியது மட்டுமல்லாது சினிமா துறையில் மற்றும் ரசிகர்களின் மனதில் என இரண்டிலும் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி நீங்கா இடம் பிடித்தவர்கள் ஆக இன்றளவும் திகழ்ந்து வருகின்றனர். இவர்களுடைய பெயரை சொல்லும் பொழுது அல்லது இவர்களுடைய பாடல்களை கேட்கும்பொழுது மலரும் நினைவுகள் போல் இவர்களது படங்கள் பாடல்கள் கண்முன் தோன்றுவது இன்றளவும் இயல்பாக நடக்கும் காரியமாகவே உள்ளது.