லக்கி பாஸ்கர் திரைப்படத்தை மிஞ்சிய நிஜ கொள்ளையர்!! 20 வருடங்களாக நிகழ்த்தப்பட்ட கொள்ளை!!

Photo of author

By Gayathri

லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் ஒரு சாதாரண வங்கி ஊழியர் எவ்வாறு தன்னுடைய பணியை பயன்படுத்தி கொள்ளை அடிக்கிறார் என்பதை இயல்பான வாழ்க்கையோடு இணைத்து கூறியிருப்பார்கள். அந்த திரைப்படம் வெறும் பொழுதுபோக்கு மட்டுமே ஆனால் உண்மையில் ஜப்பான் நாட்டில் யுகாரி என்ற வங்கி ஊழியர் 20 வருடங்களாக தான் பணிபுரிந்த வங்கியில் இருந்து பல கோடிகளை கொள்ளையடித்து இருப்பது அதிர்ச்சியை உள்ளாக்கியுள்ளது.

MUFG என்ற ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் இருக்கக்கூடிய வங்கியில் யுகாரி இமாமுரா என்ற 46 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பணிபுரிந்து வந்திருக்கிறார். அந்த வங்கியில் பல லாக்கர்களை நிர்வகிக்கக்கூடிய பணியினை இவர் மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. தன்னுடைய பணியை பயன்படுத்தி லாக்கர்களுக்கு போலியான சாவிகளை உருவாக்கி அதன் மூலம் 20 வருடங்களாக கொஞ்சம் கொஞ்சமாக தங்கம் மற்றும் பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடி வந்ததாக கூறப்படுகிறது.

வங்கியில் தங்களுடைய நகைகளை விலைமதிப்பற்ற பொருட்களை பாதுகாப்பிற்காக வைத்த வங்கி பயனர்கள் வந்து கேட்கும் பொழுது, வங்கியில் மின்சார துண்டிப்பு ஏற்பட்டுள்ளது அல்லது வேறு ஏதேனும் காரணங்களை கூறி மற்றொரு நாள் வருமாறு கூறிய அனுப்பி விடுவாராம். இவ்வாறு செய்வதன் மூலம் வங்கி பயனர்கள் 6 மாதங்கள் அல்லது 1 வருடங்கள் கழித்து தான் மீண்டும் வங்கிக்கு வருவார்கள் என்பதை உணர்ந்த யுகாரி அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி திருட தொடங்கியிருக்கிறார்.

சாதாரண வங்கியில் வேலை பார்க்கக் கூடிய ஊழியர் எவ்வாறு திடீரென ஆடம்பர வாழ்க்கையை வாழ முடியும் மற்றும் இந்த சம்பளத்தின் மூலம் இப்படி ஒரு வாழ்க்கையை வாழ்வது என்பது இயலாத காரியம் என்பதால் இவருடன் பணிபுரிந்த பணியாளர்களுக்கு சந்தேகம் ஏற்படவே ஜப்பான் காவல்துறையினருக்கும் இவர் மீது நடவடிக்கை எடுக்க இது வழி வகையாக அமைந்திருக்கிறது. இந்த விசாரணையின் மூலம் 20 வருடங்களாக இவர் 55 கோடி பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளை அடித்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த செய்தி வங்கி ஊழியர்கள் மட்டுமின்றி பொதுமக்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.