டொனால்ட் டிரம்பின் ஆட்சி பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை வழங்கும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை பெறுவதற்கான புதிய விதிகள் வரவுள்ளது.
அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை அதிபராக ஜே.டி. வான்ஸ் பதவியேற்றனர். டிரம்பின் முதல் நாளில், அவர் பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை வழங்கும் திட்டத்தை ரத்து செய்யும் அறிவிப்பை வெளியிட்டார். இதனால், அமெரிக்காவில் வாழும் 10 லட்சம் இந்தியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
1868ஆம் ஆண்டு இருந்து அமலுக்கு வந்த இந்த சட்டத்தை, தற்போது டிரம்ப் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். புதிய நிர்வாக உத்தரவில், அமெரிக்காவில் பிறந்த குழந்தைக்கு குடியுரிமை பெற குறைந்தபட்சம் ஒரு பெற்றோராவது அமெரிக்க குடிமகனாக இருக்க வேண்டும் அல்லது சட்டப்பூர்வ நிரந்தர குடியிருப்பாளராக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம், சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேற்றம் செய்தவர்கள் அல்லது மாணவர், சுற்றுலா விசாவில் வந்தவர்கள் ஆகியவர்களின் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை கிடைக்காது. இது, எச்1பி விசா போன்ற சட்டப்பூர்வ குடியேற்றம் கொண்டவர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, இதனால் பெரும் அதிர்ச்சியுடன் கூடிய மாற்றம் ஏற்பட உள்ளது. இந்த உத்தரவு 30 நாட்களில் அமலுக்கு வரவுள்ளது,
அதன்பிறகு, எச்1பி விசாவில்
அமெரிக்கா சென்றுள்ள இந்தியர்கள் மற்றும் கிரீன்கார்டுக்காக காத்திருக்கும் இந்தியர்களின் குழந்தைகளுக்கு தாமாக குடியுரிமை கிடைக்காது. தற்போது, 10 லட்சம் இந்தியர்கள் கிரீன்கார்டுக்காக காத்திருப்பதால், இந்த கொள்கை மாற்றம் அவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.
இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் எச்1பி விசா பெற்று அமெரிக்காவில் தங்கி பணியாற்றி வருகின்றனர். டிரம்ப் இந்த உத்தரவை வெளியிட்ட சில மணிநேரத்துக்குள், குடியேற்ற வழக்கறிஞர்கள் இந்த உத்தரவை எதிர்த்து வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.