மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு சக்கர நாற்காலி!! தம்பி ராமையாவின் உருக்கம்!!

Photo of author

By Gayathri

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள சேந்தமங்கலம் பிரிவு சாலையில் உள்ள ராசி பள்ளியில் தனியார் ரோட்டரி சங்கம் சார்பில் இன்று நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் நடிகர் தம்பிராமையா தலைமைய ஏற்றுள்ளார். இவர் நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கம் குறித்து பேசியுள்ளார். பின்னர் அவர் இயற்றிய பாடல்களை சங்க நிர்வாகிகளின் முன்னிலையில் பாடி, அமைதியாக இருந்த அரங்கத்தை நகைக்க வைத்துள்ளார்.

பின்னர் அங்குள்ள மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு 25 ஆயிரம் மதிப்பளிலான சக்கர நாற்காலியை வழங்கியதோடு, கன நிமிடத்தில் அச்சிறுவன் நிலை குறித்து இறைவனிடம் பிராத்தித்துள்ளார். மேலும், போலியோ இல்லாத உலகம் உருவாக சங்க நிர்வாகிகளிடம் வசூல் செய்யப்பட்ட மூன்று லட்சம் ரூபாய் காசோலையை ரோட்டரி கிளப்பிடம் வழங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து, அப்பா வைத்த பெயர் ராமையா மற்றும் அம்மா பாசமாக தம்பி என்று அழைப்பார் இவ்விரண்டும் இணைந்து தான் தமக்கு தம்பி ராமையா எனப் பெயர் புணர்ந்தது என்றார். மேலும், சினிமாவிற்கு தான் வந்தது விதி என்றும் பேசியுள்ளார்.