2025 பிறந்த முதல் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்திருந்தார். எனவே, சட்டசபையில் பெரும் தாக்கம் ஏற்பட்டு ஆளுநர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து அவர், திருத்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்திருந்தார். இதற்காகவும் இவர் மீது வழக்கு பதியப்பட்டு நிலுவையில் உள்ளது. தற்சமயம் இவர் பெண்களுக்கான சட்ட திருத்த மசோதாவில் ஒப்புதல் அளித்து கையெழுத்து இட்டுள்ளார்.
தமிழக சட்டசபையில் கடந்த ஜனவரி பத்தாம் தேதி பெண்களுக்கு எதிரான குற்றாலங்களில் ஈடுபடுவோர் மீது கடின தண்டனை வழங்கும் வகையில் பெண்கள் சட்டத் திருத்த மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்திருந்தார். அச்சட்டத் திருத்த மசோதாவில் பெண்களைப் பின்தொடர்ந்தால் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை, மேலும் ஜாமினும் வழங்கப்படாது எனவும், பெண்கள் மீது ஆசிட் அடிப்போர் மற்றும் ஆசிட் அடிக்க முயற்சி செய்வோருக்கு ஆயுள் தண்டனை, கடுங்காவல் சிறை தண்டனை, விளைவு அதிகமாக இருப்பின் மரண தண்டனை எனவும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவருக்கு மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை போன்ற பலத் திட்டங்களை குற்றங்களை குறைக்கும் விதமாக கடுமையானதாக மாற்றி முதலமைச்சர் சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்திருந்தார். இதனை ஒப்புதல் அளிக்க ஆளுநரிடம் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. அது தற்போது ஜனவரி 23 (இன்று) ஆளுநர் பெண்களின் சட்ட திருத்த மசோதாவில் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளார். மேலும், அத்திட்டம் குறித்த மனு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.