நடிகர் தனுஷ் அவர்கள் தன்னுடைய இட்லி கடை திரைப்படத்தில் தற்பொழுது பிசியாக பணியாற்றி வருகிறார். தனுஷ் மற்றும் அவரது மனைவியை ஐஸ்வர்யா இருவருக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் கடந்த ஆண்டு விவாகரத்து பெற்றது நாம் அனைவரும் அறிந்தே. சூழ்நிலை இவ்வாறு இருக்க வேலையில்லா பட்டதாரி படம் வெளிவந்த சமயத்தை தனுஷ் கொடுத்த பேட்டி ஒன்று தற்பொழுது வைரலாகி வருகிறது.
வேலையில்லா பட்டதாரி படத்தினுடைய விழா ஒன்றில் நடிகர் தனுஷ் மற்றும் விவேக் அவர்கள் கலந்து கொண்ட பொழுது தனுஷிடம் தொகுப்பாளர் ஒருவர், ” ஒவ்வொரு ஆணினுடைய வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பார் என கூறுவார்கள். உங்களுடைய வெற்றிக்குப் பின்னால் ஐஸ்வர்யா இருக்கிறார்” எனக் கூறிய உடன் தனுஷ் அவர்கள் பொங்கி எழுந்து விவேக் சாரை பார்த்து ” பாத்தீங்களா சார் நாம கஷ்டப்பட்டு வாயை கட்டி வயித்த கட்டி வேலை பார்த்தா அதுக்கு பின்னால ஒரு பொண்ணு இருக்காங்கன்னு சாதாரணமா சொல்றாங்க” எனக் கூறியிருக்கிறார்.
மேலும் நடிகர் தனுஷ் அவர்கள் பின்னாடி இருந்து என்ன பிரயோஜனம் என விவேக அவர்களிடம் சிரித்துக்கொண்டே கூறி இருப்பது வேலையில்லா பட்டதாரி படத்தின் பொழுதே தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இடையே கருத்து வேறுபாடு நிகழ்ந்ததை உறுதிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அது மட்டுமல்லாது தொகுப்பாளரை பார்த்து யோவ் போயா என ஒரு வித விரக்தியோடு நடிகர் தனுஷ் அவர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.