டொனால்டு டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னர், அவர் வெளியிடும் வர்த்தக உத்தரவுகள் உலக பொருளாதாரத்திலும், இந்தியா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளின் நிலைகளிலும் மாறுதல்களை ஏற்படுத்தக் கூடியவை. குறிப்பாக, இந்தியாவின் பொருளாதார உறவுகளை சிக்கலாக்கும் நடவடிக்கைகளால் பணவீக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2019ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கியின் ஆய்வில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை $10 உயர்ந்தால், இந்திய பணவீக்கம் 0.4% அளவுக்கு அதிகரிக்கும் என கண்டறியப்பட்டது. இதற்கு முக்கிய காரணம், இந்தியாவின் மொத்த எண்ணெய் தேவையின் 40% ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவது. ரஷ்யாவின் தள்ளுபடி விலைகளால், எண்ணெய் வியாபாரத்தில் இந்தியாவுக்கு நன்மை ஏற்பட்டது. ஆனால், டிரம்பின் புதிய உத்தரவுகளால், ரஷ்யாவின் எண்ணெய் நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடைகள் விதிக்கிறது. மேலும், ரஷ்யாவுடன் தொழில்நடப்புகளை செய்யக் கூடாது என்ற கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
மார்ச் 12 முதல் அமலுக்கு வரும் இந்த உத்தரவு, இந்தியாவுக்கு சிக்கலாக உள்ளது. ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்க முடியாத நிலை உருவாக, இந்தியா அமெரிக்காவிடம் அதிக விலையில் எண்ணெய் வாங்கும் நிலைக்கு தள்ளப்படும். அமெரிக்கா எண்ணெய் விலையை உயர்த்துவதோடு, அமெரிக்க டாலரில் மட்டுமே பரிவர்த்தனை செய்ய வேண்டும் என நிபந்தனை விதிக்கிறது. இதனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்ந்து, பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இப்போதைய சூழ்நிலையில், அமெரிக்கா நம்மை சபோர்ட்டு செய்யாதால், மற்ற நாடுகளின் அழுத்தங்களை சமாளிக்க இந்தியாவுக்கு சிக்கலாகும். அதனால், வரவிருக்கும் மார்ச் மாதத்தில் இந்த மாற்றங்களுக்குத் தயார் நிலையில் இருக்க வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள்.