உதவியாளர் செய்த தவறால் விசுவின் காலில் விழுந்த தயாரிப்பாளர்!! 

Photo of author

By Gayathri

நாடகங்களின் மூலம் தன்னுடைய பயணத்தை துவங்கியவர் விசு அவர்கள். பொதுவாகவே சாதாரண மக்களின் வாழ்க்கையையும் அவர்களுடைய குடும்ப சூழலையும் வெளிப்படையாக படம் பிடித்து காட்டுவதில் வல்லவராக திகழ்ந்தவர் இவர் ஆவர்.

நாடகத்திலிருந்து பாலச்சந்தர் அவர்கள் அழைக்கவே சினிமா துறைக்கு வந்தவர் இயக்குனர் கதை ஆசிரியர் நடிகர் என பன்முகங்களைக் கொண்ட விசு அவர்கள். இவர் பெரும்பாலும் படங்களை இயக்குவது நடிப்பது மட்டுமல்லாது இயக்குனர் பாலச்சந்தர், ஏவிஎம் ஸ்டுடியோவின் படங்கள் மற்றும் முத்தா பில்லம்ஸினுடைய படங்கள் என அனைவரின் தயாரிப்பில் உருவாக்கக்கூடிய படங்களின் கதை விவாதத்தில் தன்னை இணைத்துக் கொள்ளக்கூடிய மனிதராகவே திகழ்ந்திருக்கிறார்.

இவ்வாறு இருக்கும் சூழலில் திடீரென பிரபு நடித்த “சின்ன மாப்ளே” திரைப்படத்தின் உடைய முதல் நாள் படப்பிடிப்பின் பொழுது விசு அவர்கள் அதனை கேன்சல் செய்துவிட்டு ஒரே இரவில் முழு கதையையும் மாற்றி கொடுத்திருக்கிறார். அவ்வாறு மாற்றி கொடுத்த கதையின் மூலம் சின்ன மாப்ளே திரைப்படம் ஆனது ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றியை வாங்கி தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட சூழலில் தயாரிப்பாளர் டி சிவா அவர்கள் விசு அவர்களை குறித்து கூறியிருப்பதாவது :-

தயாரிப்பாளர் டி சிவா அவர்கள் விசு அவர்களுக்கு கோபிசெட்டிபாளையத்திலிருந்து சென்னைக்கு ட்ரெயினில் வருவதற்காக ட்ரெயின் டிக்கெட் போட சொல்லி இருக்கிறார். ஆனால் உதவியாளரோ அந்த டிக்கெட் கேன்சல் ஆனதை கவனிக்காமல் விட, விசு அவர்கள் சென்னைக்கு கட்டாயம் போக வேண்டிய சூழலில் சிக்கியுள்ளார். அந்த நேரத்தில் தயாரிப்பாளர் டி சிவா அவர்கள் நீங்கள் வருவதற்காக காரை அனுப்புகிறேன் அதில் வந்து சேருங்கள் என்று கூற விசு அவர்கள் அதனை மறுத்துவிட்டாராம்.

அதன்பின், செகண்ட் கிளாஸ் கோச்சில் விசு அவர்கள் சக பயணிகளுடன் பயணம் செய்து வந்துள்ளார். அவ்வாறு பயணம் செய்து வரும் பொழுது அவருடன் கிரேசி மோகன் அவர்களும் அமர்ந்து வரவே அவரது தோழல் சாய்ந்து விசு அவர்கள் இரவு முழுவதும் அமர்ந்த வாரே பயணம் செய்து வந்திருக்கிறார். விசு அவர்கள் சென்னைக்கு வந்த பெண் என்னுடைய உதவியாளர் செய்த தவறுக்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறி தயாரிப்பாளர் டி சிவா அவர்கள் விசு அவர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.

ஆனால், ட்ரெயின் டிக்கெட் கேன்சல் ஆனதற்கு நீ என்ன செய்ய முடியும் என பெருந்தன்மையுடன் கூறிவிட்டு சாதாரணமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்று இருக்கிறார். என்னதான் தனக்கு திறமை பெயர் புகழ் என அனைத்தும் இருந்தாலும் பெருந்தன்மை என்பது ஒரு மனிதனை உயர்த்தும் முக்கிய விஷயமாக உள்ளது என்பதை எளிமையாக தன்னுடைய நடையில் விசு அவர்கள் வாழ்ந்து காட்டியிருக்கிறார்.