பெண்கள் சிலர் தங்கள் மாதவிடாய் காலத்திற்கு முன்னர் வெள்ளைப்படுதல் பிரச்சனையை சந்திக்கின்றனர்.சிலருக்கு வெள்ளைப்படுதல் பாதிப்பு பெரும் தொந்தரவாக இருக்கிறது.கெட்டி சளி போன்று வெள்ளைப்படுதல் ஏற்பட்டால் அவை அந்தரங்க பகுதியில் கடும் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.இதனால் அசௌகரிய சூழலை பெண்கள் சந்திக்க நேரிடுகிறது.
அதிகளவு வெள்ளைப்படுதல் பாதிப்பை சந்திக்கும் பெண்கள் அம்மான் பச்சரிசி இலையை பொடித்து மருந்தாக பயன்படுத்தலாம்.இந்த அம்மான் பச்சரிசி இலை பெண்களில் வெள்ளைப்படுதல்,கருப்பை சார்ந்த பாதிப்பு,ஆண்களுக்கு விந்து குறைபாடு போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது.
தேவையான பொருட்கள்:-
**அம்மான் பச்சரிசி இலை – ஒரு கப்
**தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
*முதலில் அம்மான் பச்சரிசி இலையை சேகரித்து சுத்தம் செய்து வெயிலில் நன்றாக காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
*பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு நைஸ் பவுடர் பதம் வரும் வரை அரைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை சல்லடை கொண்டு சலித்து எடுத்து டப்பாவில் கொட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
*பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.தண்ணீர் சிறிது சூடானதும் அரைத்து வைத்துள்ள அம்மான் பச்சரிசி இலை பொடியை அதில் ஒரு தேக்கரண்டி அளவு கொட்டி மிதமான தீயில் கொதிக்க வையுங்கள்.
*ஐந்து நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைத்து ஒரு கிளாஸிற்கு வடிகட்டி கொள்ளுங்கள்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி பருகுங்கள்.இந்த அம்மான் பச்சரிசி பானத்தை தினந்தோறும் பருகி வந்தால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பாதிப்பு முழுமையாக குணமாகும்.
*விந்து குறைபாட்டை சந்தித்து வரும் ஆண்கள் அம்மான் பச்சரிசி இலையை காயவைத்து பொடித்து சூடான பாலில் 10 கிராம் அளவிற்கு கலக்கி பருகி வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும்.ஆண்மை குறைபாட்டால் அவதியடைந்து வருபவர்கள் அம்மான் பச்சரிசி இலையை வெயிலில் காயவைத்து பொடித்து தேனில் குழைத்து சாப்பிட்டு வரலாம்.
*கருப்பை நீர்க்கட்டி பிரச்சனை இருப்பவர்கள் அம்மான் பச்சரிசி இலையை பொடித்து சாப்பிட்டு வரலாம்.மாதவிடாய் சுழற்சி முறையாக நடைபெற அம்மான் பச்சரிசி இலையை மருந்தாக பயன்படுத்தலாம்.