இன்றைய காலகட்டத்தில் வேலைப்பளு மாறுபட்ட உணவு பழக்கம் என தொடங்கி பல காரணங்கள ஆண் பெண் மலட்டு தன்மைக்கு வழி வகுத்து விடுகிறது. இதிலிருந்து பூரண குணமடைய முதலில் உணவு பழக்கவழக்கத்தில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். குறிப்பாக ஆண்கள் ஜிங்க் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். மேற்கொண்டு துரித உணவுகளை முழுவதுமாக தவிர்க்க வேண்டும். அதேபோல உடலை சூடேற்றம் கோழிக்கறி உள்ளிட்ட பிரைடூ பொருள்களின் முற்றிலும் தவிர்ப்பது நல்லது. மேற்கொண்டு சித்த வைத்திய முறையை பின்பற்றும் பொழுது நல்ல மாற்றத்தை காண முடியும்.
தேவையான பொருட்கள்:
முருங்கைப்பூ
செம்பருத்தி
பாதாம் பருப்பு
சுக்கு
தோற்றான் கொட்டை
முருங்கை பிசின்
ஆவாரம் பிசின்
இவை அனைத்தையும் தனித்தனியாக 10 கிராம் என்று அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
செய்முறை:
தேவையான பொருட்கள் அனைத்தையும் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேற்கொண்ட சூரணம் செய்ய கோழி முட்டையின் வெள்ளை கருவை சேர்க்க வேண்டும்.
அதனையடுத்து 200 கிராம் சர்க்கரையை பாதாக்கி அதனையும் சேர்க்க வேண்டும்.
லேகிய பதத்திற்கு வந்ததும் இதனுடன் 100 கிராம் நெய் சேர்க்க வேண்டும்.
இதனை தினந்தோறும் இரவு உணவு சாப்பிட்ட பிறகு இரண்டு கிராம் என்ற வீதம் சாப்பிட்டு வர உடல் வலிமை எனத் தொடங்கி ஆண்மை பிரச்சனை அனைத்தும் நீங்கும்.