நடிகை சங்கீதா மற்றும் க்ரிஷ் வரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் இவர்களுடைய காதலுக்கு முக்கிய காரணமாக சிம்ரன் இருக்கிறார் என்பது எத்தனை பேருக்கு தெரியும் ? இது குறித்த முழு தகவலையும் இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.
க்ரிஷ் அவர்கள் பேட்டி ஒன்றில் தங்களுடைய காதல் குறித்து கூறியதாவது :-
முதலில் சங்கீதா தான் வந்தது தன்னிடம் காதல் கூறியதாக க்ரிஷ் அவர்கள் தெரிவித்திருக்கிறார். மேலும் ஒரு விழா மேடையில் சங்கீதா அவர்கள் தான் தனக்கு விருது கொடுத்ததாகவும் அப்பொழுதே அவரை தனக்கு மிகவும் பிடித்து விட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். பொதுவாக விருது விழாக்களின் பொழுது விழா முடிவில் பார்ட்டி நடைபெறுவது வழக்கமான ஒன்றாக இருந்துள்ளது. அந்த சமயத்தில் சங்கீதா மற்றும் க்ரிஷ் வரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தி இருக்கின்றனர்.
பார்ட்டி முடிந்து கிளம்பும் பொழுது சங்கீதா அவர்கள் தன்னிடம் செல்போன் நம்பர் கேட்டதாகவும் க்ரிஷ் கொடுத்துவிட்டு வந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். அதன் பின் ஒரு நாள் திடீரென போன் செய்த சங்கீதா அவர்கள் நான் உங்களை காதலிக்கிறேன். இந்த காதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல நினைக்கிறேன் என கூறி இருக்கிறார். இதனை க்ரிஷ் அவர்கள் தங்களுடைய வீட்டில் சொல்லும் பொழுது க்ரிஷ் வீட்டில் அதனை ஏற்றுக் கொள்ளவில்லையாம்.
ஆனால் சங்கீதாவின் வீட்டிலோ, க்ரிஷ் உடைய போட்டோவை காட்டும் பொழுது சிம்ரன் உடன் இருந்திருக்கிறார். அப்பொழுது சிம்ரன் அவர்கள் இந்த பையன் பார்க்க நல்லா இருக்கிறான் எனக் கூறியிருக்கிறார். சிம்ரன் சொன்ன அந்த வார்த்தை சங்கீதாவை உத்வேகப்படுத்தியதால் பிடிவாதமாக நின்று கிருஷையே திருமணம் செய்து இருக்கிறார் சங்கீதா அவர்கள்.