கவலை இல்லா மனிதன் திரைப்படமானது தன்னுடைய வாழ்வை புரட்டி போட்டு விட்டதாக கவிஞர் கண்ணதாசன் அவர்கள் கட்டுரை ஒன்றில் எழுதி இருக்கிறார்.
கட்டுரையில் கவிஞர் கண்ணதாசன் பதிவு செய்திருப்பதாவது :-
கவலை இல்லாத மனிதன் படத்திற்கு தான் ஒழுங்காக கதை எழுதவில்லை என்றும் அந்த படத்தில் நடித்த சந்திரபாபு அவர்களும் படப்பிடிப்புகளுக்கு ஒழுங்காக வரவில்லை என்றும் கம்பெனியில் வேலை பார்க்க அனைவரும் கம்பெனியின் உடைய படத்தை திருடியதாகவும் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் அதில் குறிப்பிட்டு இருக்கிறார். படம் பெயர் மட்டுமே கவலை இல்லாத மனிதன், ஆனால் உண்மையில் இந்த படத்தினால் என் வாழ்வில் கவலை கவலை கவலை கவலை கவலை கவலை என கவலை மட்டுமே குடி கொண்டு விட்டது என்றும் தெரிவித்திருக்கிறார்.
மேலும் குறிப்பிடும் அவர், இந்த படப்பிடிப்பு காலத்தில் நான் அழுததை போன்று என்னுடைய வாழ்வில் வேறு எந்த நாளிலும் நான் அழுததே இல்லை என்றும் அதில் குறிப்பிட்டிருப்பது ரசிகர்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. தான் தயாரிக்க நினைத்த இந்த திரைப்படம் ஆனது தன்னை மிகவும் மோசமான நிலையில் அதாவது கடைசியில் 6 லட்சம் ரூபாய் கடனோடு தயாரிப்பு நிறுவனத்தையே இழுத்து மூடும்படி செய்துவிட்டது என்றும் அந்த கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார்.
கவிஞர் கண்ணதாசன் மிகப்பெரிய சிறப்புமிக்க பாடல் ஆசிரியராக திகழ்ந்த காலங்கள் போய் தானே ஒரு படத்தினை தயாரிக்க முயன்று கதையினை ஒழுங்காக எழுதாமல் கோட்டை விட்டுவிட்டதாக என்றளவும் அவரை குறித்து ஒரு சில பேச்சுக்கள் சுற்றுகின்றன. அது கவலை இல்லாத மனிதன் இந்த திரைப்படத்தில் தான் நிகழ்ந்துள்ளது.