டெல்லி சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுவதையொட்டி அங்கு கடும் போட்டி நிலவி வருகின்றன. சமீபத்தில் நடந்த பிரச்சாரத்தில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வரி திணிப்பால் நடுத்தர வர்க்கங்கள் குழந்தையே வேண்டாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த வருட மத்திய பட்ஜெட் வெளியீடு அடுத்த மாதம் நடைபெற இருக்கையில், இவர் கூறிய இந்த கருத்து அனைவரிடத்தும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலை நாடுகளில் திருமணமான அல்லது இணைந்து வாழ்ந்து வரும் தம்பதிகள், அதிகரித்து வரும் வரி மற்றும் பணம் வீக்கங்களால் குழந்தைகளே வேண்டாம் என முடிவெடுத்து அதனை பரப்பியும் வருகின்றனர்.
இது போன்ற கலாச்சாரங்கள் தற்போது இந்தியாவிலும் நகரத்தை காட்டிலும் கிராமங்களில் அதிகமாக காணப்படுகின்றது. குழந்தை வேண்டாம் என முடிவெடுக்கும் பெற்றோர்களின் எண்ணிக்கை ஆண்டிற்கு 30 சதவீதமாக உயர்ந்து வருகின்றது என்று சமீபத்தில் கணக்கிடப்பட்ட புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. பெண்கள் உயர்கல்வி பயில்வது மற்றும் வேலைக்கு செல்வது போன்ற காரணங்களாலும் இந்த விபரீத முடிவு எடுப்பதாக அவைகள் தெரிவித்துள்ளன. எனவே, மத்திய அரசு இதனை கணக்கில் கொண்டு அதற்கேற்ப நடுத்தர வர்க்கங்களின் வரி கொள்கையை வெளியிடுமாறு அவர் பரிந்துரைத்துள்ளார். இதனை மாநில அரசும் கவனத்தில் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.