தற்சமயம் குளிர் காலம்,பனிக்காலம் நிலவி வருகின்றது. அத்துடன் வெயில் கால தொடக்கமும் ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் உடம்பில் உஷ்ணம் அதிகமாகி அம்மை நோய்கள் பரவி வருகின்றன. பெரும்பாலும் குளிர் காலங்களில் சின்ன அம்மை, தட்டம்மை, பொண்ணுக்கு வீங்கி, மணல்வாரி அம்மை மற்றும் அக்கி ஆகியவை பெரும்பாலும் பரவும். இவைகளின் அறிகுறியாக முதலில் காய்ச்சல், உடல் சோர்வு,உடல் வலி, வயிற்றுப்போக்கு மற்றும் பசியின்மை வரும்.
அதன் பிறகு உடலில் மாற்றங்கள் தென்படும். மேலும் தற்பொழுது குழந்தைகளை அதிகம் தாக்கி வருவதாகவும் கணிப்பு கணக்கிடப்பட்டுள்ளது. இதைக் குறித்து மருத்துவர் கூறுகையில், அம்மை நோய் ஏற்பட்டால் முதலில் அவர்களை தனிமை படுத்த வேண்டும். மருத்துவரை கண்டிப்பாக ஒரு முறையாவது அணுக வேண்டும். அதில் குறிப்பாக குழந்தைகளுக்கு வந்தால் காய்ச்சலை குறைக்கும் பாராசிட்டமாலையும், மருத்துவர் ஆலோசனைப்படி வலி நிவாரணியையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்நோய் தானாகவே சரியாகும். இருமல் தும்மல் மூலம் அடுத்தவர்களுக்கு பரவும் கூடியது. இத்தொற்றின் போது சூடாக அல்லது குளிர்ந்த உத்தரம் வீங்கி இருக்கும் கன்னங்களில் கொடுக்கலாம். மேலும், விளைவு அதிகமாக இருப்பின் கண்டிப்பான முறையில் மருத்துவரை அணுகவும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.