இளையராஜாவின் மகளான பவதாரணி அவர்கள் பின்னணி பாடகி ஆகவும் இசையமைப்பாளராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்தவர். இவர் கல்லீரல் மற்றும் பித்தப்பைபுற்றுநோயினால் பாதிக்கப்பட்டு, இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தனது 47 அவது வயதில் 2024 ஜனவரி 25 அன்று மாலையில் காலமானார்.
இவருடைய கடைசி ஆசை குறித்து தற்பொழுது இவருடைய கணவரான சபரி ராஜ் அவர்கள் தெரிவித்திருப்பதாவது :-
2024 ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி பவதாரணி மற்றும் அவரது கணவரான சபரி ராஜ் இருவரும் இலங்கை சென்றதாகவும், அந்த நேரத்தில் பவதாரணி அவர்களுக்கு உடல்நிலை மிகவும் மோசமான கட்டத்தை நெருங்கிய நிலையில் பவதாரணியின் கணவர் தமிழ்நாட்டிற்கு திரும்பி சென்றுவிடலாம் என கூறியிருக்கிறார்.
ஆனால் பாதாரணி அவர்கள், தன்னுடைய தந்தை ஆகிய இளையராஜா ஒரு கான்செட்டிற்காக இலங்கைக்கு வருகிறார் என்றும் தனக்கு அவரை காண வேண்டும் போல் உள்ளது என்றும் தெரிவித்திருக்கிறார். அதற்குரியதை போன்று அவரது தந்தையான இளையராஜா அவர்கள் இலங்கைக்கு வந்த பின் பவதாரிணையை சந்தித்து பேசியதாகவும் பவதாரணியின் கணவர் தெரிவித்திருக்கிறார்.
பவதாரணி என்னுடைய கடைசி ஆசையாக அவருடைய தந்தையை பார்த்து விட்டார் என்றும் தன்னுடைய அப்பாவை காண வேண்டும் என்பதே அவரின் கடைசி ஆசையாக அமைந்துவிட்டது என்றும் பின்னணி பாடகி பவதாரணியின் கணவர் தெரிவித்திருக்கிறார்.