Stroke:மோசமான உணவுமுறை பழக்கம்,வாழ்க்கை முறை மாற்றத்தால் ஏற்படக் கூடிய நோய்களில் ஒன்று பக்கவாதம்.முன்பெல்லாம் வயதானவர்கள் மட்டும் தான் பக்கவாத பாதிப்பை சந்தித்து வந்தனர்.
ஆனால் தற்பொழுது 30 வயதிற்கு கீழ் இருக்கும் இளம் வயதினரும் பக்கவாத பாதிப்பால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பக்கவாத நோய் அறிகுறிகள்:
*கை கால் முகத்தில் திடீர் தளர்வு உணர்வு
*வாய் ஒருபக்கம் ஒதுக்குதல்
*திடீர் பார்வை குறைபாடு ஏற்படுதல்
*அதிகமான வியர்த்தல்
*பேச்சில் தடுமாற்றம் ஏற்படுதல்
*கை,கால் நடுக்கம்
*சுயநினைவை இழத்தல்
பாகவாதம் வருவதற்கான காரணங்கள்:
*பரம்பரைத் தன்மை
*மது மற்றும் புகைப்பழக்கம்
*உடல் பருமன்
*தீவிர சர்க்கரை நோய்
*சிறுநீரக கோளாறு
*இதய நோய்
*வயது முதுமை
*நரம்பு பலவீனமடைதல்
தேவையான பொருட்கள்:
1)எலுமிச்சம் பழம் – ஒன்று
2)தண்ணீர் – ஒரு கப்
தயாரிக்கும் முறை:
ஒரு எலுமிச்சம் பழத்தை நறுக்கி அதில் இருந்து சாறு பிழிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு கப் அளவிற்கு அதில் தண்ணீர் ஊற்றி மிக்ஸ் செய்து பருகி வந்தால் பக்கவாத பாதிப்பில் இருந்து மீளமுடியும்.
தேவையான பொருட்கள்:
1)ஓட்ஸ் – இரண்டு தேக்கரண்டி
2)பாதாம் பொடி – அரை தேக்கரண்டி
3)பால் – அரை கப்
தயாரிக்கும் முறை:
முதலில் அடுப்பில் பாத்திரம் வைத்து இரண்டு தேக்கரண்டி அளவு ஓட்ஸ் சேர்த்து மிதமான தீயில் வறுக்க வேண்டும்.
பிறகு அதில் அரை கப் அளவிற்கு பசும் பால் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.அதன் பிறகு இரண்டு அல்லது மூன்று பாதாம் பருப்பை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இதை கொதிக்கும் ஓட்ஸ் பாலில் போட்டு கலந்துவிட வேண்டும்.
பிறகு இந்த பாலை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி பருகி வந்தால் பக்கவாத பாதிப்பில் இருந்து முழுவதுமாக மீண்டுவிடலாம்.
தேவையான பொருட்கள்:
1)பசும் பால் – ஒரு கப்
2)வாழைப்பழம் – ஒன்று
தயாரிக்கும் முறை:
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் பசும் பால் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.பிறகு ஒரு வாழைப்பழத்தை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி பாலில் போட்டு கொதிக்க வைத்து பருகி வந்தால் பக்கவாத பாதிப்பில் இருந்து மீண்டுவிடலாம்.அதேபோல் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமாகும்.