கொடுத்து சிவந்த கைகள் என அனைவராலும் போற்றப்பட்டவர் எம்ஜிஆர். இவர் தன்னுடன் நடிக்கும் நடிகர்கள் மட்டுமல்லாது எத்தனை எத்தனையோ கோடி மக்களுக்கு நன்மை புரிந்தவர். ஒரு நடிகராகவும் நல்ல மனிதராகவும் வாழ்ந்து காட்டியவர்.
விஜயகாந்த் அவர்களை கூட ” கருப்பு எம்.ஜி.ஆர் ” என்று மக்கள் அனைவரும் அன்புடன் அழைத்தனர். அதற்கு காரணம் இவர் உதவியென கேட்கும் முன்பே ஓடி உதவிய நல்ல மனம் கொண்டவர். எம்ஜிஆர் மற்றும் விஜயகாந்த் இருவருக்கும் பல விஷயங்கள் கொஞ்சம் போல் அமைந்துள்ளன.
முதலில் இவர்கள் இருவருக்கும் பிறருக்கு உதவ வேண்டும் என்று மனப்பான்மை அதிகம் இருந்தது. அதன்பின் சினிமாவில் பலரை மிளிரச் செய்த ரத்தினங்களாக இவர்கள் இருவரும் விளங்கினார்கள். தன்னுடைய வளர்ச்சியை எண்ணாது பிறருடைய வளர்ச்சியை மதித்து போற்றினர். இவை மட்டுமல்லாது இவர்கள் இருவரும் பிரச்சனை என்று வரும் பொழுது களத்தில் இறங்கி சண்டையிடும் அளவிற்கு வல்லமை வாய்ந்தவர்களாக விளங்கினர்.
எம்ஜிஆர் மக்களுக்கு உதவினார், நடிகர்களுக்கு உதவினார். அவருக்குப் பிறகு கருப்பு எம்.ஜி.ஆர் என்று அழைக்கப்படும் விஜயகாந்த் அவர்கள் மக்களுக்கு நடிகர்களுக்கு என தன்னால் இயன்ற அனைவருக்கும் உதவினார். அவருக்குப் பின் யாருக்கு அந்த வல்லமை இருக்கிறது என்பதை காலம்தான் கூற வேண்டும்.