சொறி சிரங்கு புண்களை குணமாக்கும் அதிசய இலை!! பலன் கிடைக்க.. ஜஸ்ட் ஒன் டைம் ட்ரை பண்ணுங்க போதும்!!

Photo of author

By Divya

தோல் வியாதிகளில் மிகவும் கொடிய பாதிப்பாக இருக்கும் சொறி சிரங்கை இயற்கையான முறையில் குணப்படுத்தும் வழிகள் இதோ.

தேவையான பொருட்கள்:-

1)மஞ்சணத்தி இலை – ஒரு கைப்பிடி
2)மஞ்சள் கிழங்கு – ஒரு துண்டு
3)தண்ணீர் – தேவைக்கேற்ப

செய்முறை விளக்கம்:-

1.ஒரு கைப்பிடி மஞ்சணத்தி இலையை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி இரண்டு மூன்று முறை அலசி சுத்தப்படுத்தி எடுத்துக் கொள்ள வேண்டும்.

2.பிறகு கல்வத்தில் இந்த மஞ்சணத்தி இலையை போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி விழுது பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

3.அதன் பின்னர் ஒரு துண்டு மஞ்சள் கிழங்கை போட்டு மீண்டும் அரைத்து எடுக்க வேண்டும்.இந்த மஞ்சணத்தி பேஸ்டை சொறி சிரங்கு மீது பூசி வந்தால் சீக்கிரம் குணமாகும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

1)மஞ்சணத்தி இலை – ஒரு கைப்பிடி
2)வெள்ளை பூண்டு பற்கள் – 5 அல்லது 6
3)குப்பைமேனி கீரை – கால் கைப்பிடி

செய்முறை விளக்கம்:-

1.மஞ்சணத்தி இலை மற்றும் குப்பைமேனி இலையை சொல்லிய அளவுப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.

2.பிறகு இதை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து மிக்சர் ஜார் அல்லது கல்வத்தில் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

3.பிறகு ஐந்து வெள்ளை பூண்டு பற்களை தோல் நீக்கிவிட்டு அரைத்த விழுதில் போட்டு மீண்டும் அரைத்து சொறி சிரங்கு மீது பூசினால் ஒரு சில வாரங்களில் அப்பாதிப்பு குணமாகிவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
2)மிளகுத் தூள் – கால் தேக்கரண்டி
3)குப்பைமேனி இலை பொடி – அரை தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

1.முதலில் ஒரு தாளிப்பு கரண்டி எடுத்து ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

2.பிறகு அதில் கால் தேக்கரண்டி மிளகுத் தூள் சேர்த்து ஸ்பூன் கொண்டு கலந்துவிட வேண்டும்.அடுத்து அரை தேக்கரண்டி குப்பைமேனி இலை பொடியை போட்டு நன்றாக கலந்துவிட வேண்டும்.இந்த பேஸ்டை சொறி சிரங்கு மீது அப்ளை செய்து வந்தால் அவை சீக்கிரம் குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)கற்றாழை ஜெல் – ஒரு தேக்கரண்டி
2)மருதாணி இலை – அரை கப்

செய்முறை விளக்கம்:-

1.முதலில் மருதாணி இலையை பேஸ்ட் பதத்திற்கு அரைத்து கொள்ள வேண்டும்.அதன் பிறகு கற்றாழை மடலில் இருந்து ஜெல்லை பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

2.மருதாணி இலையை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து பேஸ்டாக்கி கொள்ள வேண்டும்.பிறகு இந்த மருதாணி பேஸ்ட்டில் கற்றாழை ஜெல் சேர்த்து சொறி சிரங்கு மீது அப்ளை செய்து வந்தால் அவை சீக்கிரம் குணமாகும்.