இடுப்பு வலி வாட்டி வதைக்குதா? அப்போ உடனே இந்த ஒரு உருண்டை சாப்பிடுங்கள் போதும்!!

Photo of author

By Divya

இன்று பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் இடுப்பு வலியால் அவதியடைந்து வருகின்றனர்.இந்த இடுப்பு பகுதியில் திடீரென்று கடுமையான வலி ஏற்படும்.கர்ப்பிணி பெண்களுக்கு இடுப்பு வலி பொதுவான ஒரு பிரச்சனை தான்.ஆனால் ஒருசிலருக்கு காரணமின்றி அடிக்கடி இடுப்பு வலி பாதிப்பு ஏற்படுகிறது.

இந்த இடுப்பு வலியில் இருந்து மீளவும் எலும்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதும் இயற்கை வைத்தியத்தை நாம் நாடலாம்.இதனால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

இடுப்பு வலி வரக் காரணம்:

*எலும்பு தேய்மானம்
*முதுமை
*ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம்
*உடல் பருமன்
*வேலைப்பளு
*கால்சியம் குறைபாடு

தேவையான பொருட்கள்:-

1.ஒரு கப் கருப்பு எள்
2.அரை கப் உளுந்து பருப்பு
3.இருநூறு கிராம் வெல்லம்
4.நான்கு ஸ்பூன் நெய்
5.அரை கப் ஆரியம்
6.அரை கப் நிலக்கடலை

செய்முறை விளக்கம் இதோ:-

1)முதலில் கருப்பு எள்,கருப்பு உளுந்து பருப்பு,நிலக்கடலை ஆகியவற்றை சொல்லிய அளவுப்படி எடுத்து தனி தனியாக வாணலியில் போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும்.எள் கருவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.எள்ளை வறுக்கும் பொழுது சிறிது கருகிவிட்டாலும் கசப்பு தன்மை ஏற்பட்டுவிடும்.

2)வறுத்த பொருட்கள் அனைத்தையும் நன்றாக ஆறவிட வேண்டும்.அடுத்து அரை கப் ஆரியம் அதாவது ராகியை சுத்தம் செய்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடராக பொடித்துக் கொள்ள வேண்டும்.

3)பிறகு இதை ஒரு கிண்ணத்தில் கொட்டிவிட வேண்டும்.அதன் பிறகு வறுத்த நிலக்கடலை,கருப்பு உளுந்து பருப்பு மற்றும் கருப்பு எள்ளை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்து ராகி மாவில் கொட்டி நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.

4)அதன் பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து 200 கிராம் வெல்லத்தை கொட்டி சிறிது தண்ணீர் ஊற்றி கரையும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு இந்த வெல்லத் தண்ணீரை அரைத்த மாவில் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைய வேண்டும்.

5)அதன் பிறகு கைகளில் நெய் அப்ளை செய்து கொண்டு மாவை சிறு உருண்டைகளாக உருட்டி வைக்க வேண்டும்.பின்னர் இதை ஒரு டப்பாவில் போட்டு வைக்கவும்.இந்த உருண்டையை தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு எலும்பின் வலிமை அதிகரிக்கும்.அடிக்கடி இடுப்பு வலியை அனுபவித்து வருபவர்கள் இந்த ஒரு உருண்டையை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.