தமிழ் சினிமாவின் மூவேந்தர்கள் பற்றி தெரியுமா!!

Photo of author

By Gayathri

தமிழ் சினிமாவின் மூவேந்தர்கள் பற்றி தெரியுமா!!

Gayathri

Do you know about Moovendras of Tamil cinema!!

மூவேந்தர்களாக நாம் அறிபவர்கள் சேர சோழ மற்றும் பாண்டிய மன்னர்கள். இவர்கள் அனைவரும் நாட்டை ஆண்டவர்கள். ஆனால் இப்பொழுது நாம் பார்க்கப் போகிறவர்கள் தமிழ் சினிமாவை தங்களுடைய காலகட்டத்தில் ஆட்சி புரிந்தவர்கள்.

எம்ஜிஆர் :-

1939 ஆம் ஆண்டு முதல் சதி லீலாவதி என்ற திரைப்படத்தில் அறிமுகமான எம்ஜிஆர் அவர்கள் தன்னுடைய நடிப்பின் திறமையாலும் ஆளுமையாலும் தமிழ் சினிமா உலகை மட்டும் இன்றி தமிழ் நாட்டையும் மூன்று முறை முதல்வராக நின்று ஆட்சி புரிந்திருக்கிறார். இப்படிப்பட்ட சிறப்புமிக்க இவரை மூவேந்தர்களில் முதல்வராக மக்கள் போற்றுகின்றனர்.

சிவாஜி கணேசன் :-

1952 ஆம் ஆண்டு பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சிவாஜி கணேசன். நடிகர் திலகம் என்று இன்றளவும் மக்களால் போற்றப்படக்கூடிய மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த சிறந்த நடிகராக இவர் விளங்கி வருகிறார். நவரசங்களையும் தன்னுடைய முக பாவனைகளில் காட்டுவதில் இவர் சிறப்புமிக்க நடிகராக கருதப்படுகிறார். 288 திரைப்படங்களில் நடிப்பு திரை உலகில் தன்னுடைய ஆதிக்கத்தை இன்றளவும் நிலைநாட்டி வருபவர் இவர் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

ஜெமினி கணேசன் :-

1947 ஆம் ஆண்டு மிஸ் மாலினி என்னும் திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் ஜெமினிகணேசன் அவர். காதல் மன்னன் என்னும் பெயரை இன்றளவும் தன்னகத்தை கொண்டிருக்க கூடிய சிறப்புமிக்க நடிகராக ஜெமினி கணேசன் வாழ்ந்து வருகிறார். அவருடைய காலகட்டத்தில் பெண்கள் அனைவருக்கும் உண்மையான காதல் மன்னனாகவே இவர் விளங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 200 திரைப்படங்களுக்கும் மேல் நடித்த சினிமா உலகில் இன்றளவும் போற்றப்பட்டு வருகிறார்.

இவர்கள் மூவரும் தமிழ் சினிமா துறையின் மூவேந்தர்களாக போற்றப்படுவதற்கு காரணம் இவர்கள் மூன்று பேரும் தங்களுடைய தனித்திறமை ஆளும் நடிப்பின் மீது கொண்ட பற்றினாலும் மூவேந்தர்களாக போற்றப்படுபவர்கள். இவர்களுக்குப் பின் வந்த நடிகர்கள் யாரும் இவர்கள் அளவுக்கு பெயர் பெறவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது.