கடந்த ஜூன் மாதம் பெண்களுக்கு எதிராக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டுள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் 3 மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வோர் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.
இந்த நேரத்தில் பெண்களுக்கு எதிராக நடத்தப்பட்டும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. ஜீன் மாதம் மட்டுமே 2,043 புகார்கள் குவிந்துள்ளது. இது கடந்த 8 மாதங்களை காட்டிலும் மிக அதிகமாகும். இதுகுறித்து தேசிய மகளிர் ஆணையர் பேசுகையில்; ஊரடங்கு நேரத்தில் பெண்களின் பாதுகாப்புக்கு எதிரான சம்பவங்களும், புகார்களும் அதிகரித்துள்ளன. குடும்ப வன்முறையாக 452 புகார்களும், பெண்களை உணர்வுப்பூர்வமாக சிக்கல் உண்டாக்குவதாக 603 புகார்களும் வந்துள்ளன.
கடந்த ஆண்டின் இறுதியில் வந்த புகார்களைவிட சமீபத்திய பெண்களுக்கு எதிரான புகார்கள் அதிகரித்துள்ளது. டுவிட்டர் போன்ற சமூகவலைதளங்களில் மூலம் மற்றும் தொலைக்காட்சிகளில் பெண்கள் பாதுகாப்பிற்காக ஒளிபரப்பும் புகார் எண்களின் மூலமும் அதிக புகார்கள் வந்துள்ளதாக’ அவர் கூறினார். ஊரடங்கு காலம் பல குடும்பங்களில் கடன், தவணை, வருமான சிக்கல்களால் சண்டைகள் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.