ஒரு மணி நேரத்தில் சிறுநீரக கல்லடைப்பு நீங்க.. இந்த பொடியை 100 மில்லி சுடுநீரில் கலந்து குடிங்க!!

Photo of author

By Divya

உங்கள் சிறுநீரகத்தில் உள்ள கற்களை செலவின்றி கரைக்கும் எளிய வீட்டு வைத்திய குறிப்புகள் இங்கு
கொடுக்கப்பட்டுள்ளது.

சிறுநீரக கல் உருவாக காரணங்கள்:-

**போதிய அளவு தண்ணீர் பருகாமை
**யூரிக் அமிலம் அதிகரித்தல்
**அதிகளவு உப்பு உணவுகள் எடுத்துக் கொள்ளுதல்
**உடல் பருமன்
**சிறுநீரக தொற்று

சிறுநீரக கல் இருப்பதற்கான அறிகுறிகள்:-

**சிறுநீர் துர்நாற்றம் வீசுதல்
**அடர் மஞ்சள் நிற சிறுநீர் வெளியேற்றம்
**கடுமையான வயிற்று வலி
**கீழ் முதுகு வலி
**இரத்தம் கலந்த சிறுநீர் வெளியேறுதல்

தேவையான பொருட்கள்:-

1)ஆப்பிள் சீடர் வினிகர் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கப்

செய்முறை விளக்கம்:-

1.அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் சூடுபடுத்துங்கள்.தண்ணீர் சிறிது சூடானதும் இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றிக் கொள்ளுங்கள்.

2.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலக்கி பருகுங்கள்.இந்த ஆப்பிள் சீடர் வினிகர் பானத்தை பருகி வந்தால் சிறுநீரகத்தில் படிந்துள்ள கற்கள் கரைந்து கழிக்கும் சிறுநீரில் வந்துவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)நீர்முள்ளி சீட்ஸ் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

1.நாட்டு மருந்து கடையில் நீர்முள்ளி விதை கிடைக்கும்.இந்த விதையை தங்களுக்கு தேவையான அளவு வாங்கிக் கொள்ளுங்கள்.

2.பிறகு பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு ஒரு தேக்கரண்டி நீர்முள்ளி விதையை அதில் போட்டு குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

3.பிறகு இந்த நீர்முள்ளி விதை பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி பருகி வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்து வெளியேறிவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)தக்காளி – ஒன்று
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
3)எலுமிச்சை சாறு – சிறிதளவு

செய்முறை விளக்கம்:-

1.முதலில் ஒரு தக்காளி பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.அடுத்து இதை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

2.பின்னர் இந்த ஜூஸை ஒரு கிளாஸிற்கு ஊற்றி சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து பருகினால் சிறுநீரக கற்கள் கரைந்துவிடும்.வாழைத்தண்டை அரைத்து ஜூஸாக பருகி வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்துவிடும்.