ஆரோக்கியம் இல்லாத உணவுப் பழக்கம் தான் கல்லீரலில் அழுக்குகள் தேங்க காரணமாக அமைகிறது.உடலில் மிக முக்கிய உள்ளுறுப்பாக திகழும் கல்லீரல் சரியாக இயங்காவிட்டால் பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்.கல்லீரலில் தேங்கிய அழுக்கு மற்றும் கொழுப்புகள் கரைய கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)எலுமிச்சம் பழம் – இரண்டு
2)வெள்ளரிக்காய் – ஒன்று
3)புதினா இலை – 8 முதல் 10
செய்முறை விளக்கம்:-
ஸ்டெப் 01:
முதலில் ஒரு கண்ணாடி பாத்திரம் எடுத்துக் கொள்ள வேண்டும்.கண்ணாடி பாத்திரம் இல்லாதவர்கள் சாதாரண பாத்திரம் எடுத்துக் கொள்ளுங்கள்.அடுத்து ஒன்று முதல் ஒன்றரை லிட்டர் தண்ணீரை அதில் ஊற்றிக் கொள்ளுங்கள்.
ஸ்டெப் 02:
பிறகு ஒரு வெள்ளரிக்காயை கழுவி சுத்தம் செய்து வட்ட வடிவில் நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த வெள்ளரி துண்டுகளை எடுத்து வைத்துள்ள தண்ணீரில் போட்டுக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 03:
அடுத்து ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாறை வெள்ளரி துண்டுகள் போட்டுள்ள கிண்ணத்தில் பிழிந்து கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 04:
அடுத்ததாக ஒரு எலுமிச்சம் பழத்தை மெல்லிய துண்டுகளை நறுக்கி வெள்ளரி நீரில் போட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 05:
பிறகு பத்து புதினா இலைகளை பொடியாக நறுக்கி அதில் போட்டு ஒரு மணி நேரம் ஊறவிட வேண்டும்.பிறகு இந்த ஒரு லிட்டர் தண்ணீரை நாள் முழுவதும் சிறிது சிறிதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.இந்த பானத்தை தொடர்ந்து பருகி வந்தால் கல்லீரலில் தேங்கி இருக்கும் அழுக்கு கழிவுகள் முழுமையாக நீங்கி கல்லீரல் சுத்தமாகிவிடும்.
அடிக்கடி எலுமிச்சை பானம் பருகி வந்தால் கல்லீரலில் தேங்கி இருக்கும் அழுக்கு கழிவுகள் முழுவதும் நீங்கிவிடும்.கல்லீரலில் உள்ள அழுக்குகள் நீங்க மது மற்றும் புகைப்பழக்கத்தை முற்றிலும் கைவிட வேண்டும்.
அடிக்கடி பீட்ரூட் ஜூஸ் செய்து பருகி வந்தால் கல்லீரலில் தேங்கி இருக்கும் கழிவுகள் அடித்துக் கொண்டு வெளியேறிவிடும்.சிட்ரஸ் பழ சாறை அடிக்கடி பருகி வந்தால் கல்லீரலில் தேங்கிய கழிவுகள் வெளியேறிவிடும்.