சிக்கலில் இருந்த பழங்குடியினரின் வீட்டு வசதி திட்டம்!! தீர்த்து வைத்த தமிழக அரசு!!

0
13
Housing scheme for troubled tribals!! Government of Tamil Nadu solved!!
Housing scheme for troubled tribals!! Government of Tamil Nadu solved!!

பண்டைய பழங்குடியின மக்களான தோடா, இருளர், பனியன், காட்டுநாயக்கன், கோட்டா மற்றும் குறும்பா ஆகிய பழங்குடியின மக்களுக்கான வீடுகள் வழங்கும் திட்டம் பிரதான் மந்திரியின் பெருந்திட்டத்தோடும் தமிழக அரசின் கூடுதல் நிதி ஒதுக்கீட்டோடும் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 2023 – 24 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டின் படி 4811 வீடுகள் மற்றும் 2024 – 25 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டின் படி 7,136 வீடுகள் என மொத்தம் 11,947 வீடுகள் நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தற்பொழுது வரை 6559 வீடுகள் அனுமதி பெற்று வீடு கட்டும் பணிகளானது முன்னேற்றத்தில் இருந்து வருவதாகவும் மீதமுள்ள வீடுகளும் தகுதியுள்ள பயனாளிகளை கண்டறிந்து விரைவில் வழங்கப்பட இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசன் 2 லட்சம் ரூபாய் நிர்ணயத்த நிலையில் மத்திய அரசு தன்னுடைய பங்காக 13.48 கோடி ரூபாயும் மாநில அரசு தன்னுடைய பங்கான 8 புள்ளி 8.98 கோடி ரூபாயும் நிர்ணயித்த நிலையில், 2 லட்சம் ரூபாயில் வீடுகளை கட்டுவது என்பது முடியாத காரியமாக இருப்பதால் தற்பொழுது அதனை மாநில அரசின் பொறுப்பு ஏற்று சமவெளியில் கட்டப்படக்கூடிய வீடுகளுக்கு ரூ. 5,07,000 எனவும் மலைப்பாங்கான பகுதிகளில் கட்டப்படக்கூடிய வீட்டிற்கு ரூ. 5.73.000 எனவும் உயர்த்தி அரசாணையை மாநில அரசு வெளியிட்டிருக்கிறது.

இதற்காக தமிழ்நாடு அரசு தற்பொழுது 108.71 கோடியை கூடுதலாக ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் பழங்குடியின மக்களுக்கான பிரதான் மந்திரியின் பெருந்திட்டத்தின் கீழ் வீடுகள் விரைந்து கட்டி தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleமுதல்வரின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி!!மொத்த குடும்பமும் பரிதவிப்பு!!
Next articleகட்சியினுடைய அடிமட்ட தொண்டனையும் சிந்திக்கும் தலைவர்!! பனையூரில் நடந்தது இதுதான்!!