ஒலி மாசு அதிகரிப்பால் எடுக்கப்பட்ட அதிரடி முடிவு!! இனி இதெல்லாம் தண்டனைக்குரியது!!

0
7
Action taken due to increase in noise pollution!! Now all this is punishable!!
Action taken due to increase in noise pollution!! Now all this is punishable!!

ஒலி மாசு அதிகரிப்பால் எடுக்கப்பட்ட அதிரடி முடிவு. தமிழ்நாட்டில் உள்ள ஒலி மாசு கட்டுப்பாட்டு ஆணையத்தால் நிர்ணயம் செய்யப்பட்ட ஒலி மாசுபாட்டை விட அதிக அளவில் இருப்பதாக புகார் வந்த நிலையில் தமிழக அரசு இதனை கட்டுப்படுத்துவதற்காக அதிகாரிகளை நியமனம் செய்துள்ளது.

ஒலி மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது :-

✓ இரவு 10 மணிக்கு மேல் பொதுமக்கள் வசிக்கக் கூடிய குடியிருப்பு பகுதிகள் மற்றும் அமைதி மண்டலமாக வரையறுக்கப்பட்ட பகுதிகளில் வாகனங்களின் ஹாரன்கள் தடை செய்யப்பட்டுள்ளது.

✓ இரவு நேரங்களில் அதிக அளவு சத்தத்தை எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

✓ குடியிருப்பு பகுதிகள் மற்றும் அமைதி மண்டலங்கள் இரவு நேரத்தில் அதிக அளவு சத்தத்தை ஏற்படுத்தக்கூடிய இயந்திரங்களை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவற்றை கண்காணிப்பதற்கு தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆர்டிஓக்கள் போன்றவர்களை நியமனம் செய்திருப்பதாகவும் இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous articleஅரசியலுக்கு முக்கியம் பேச்சு!! முதலமைச்சர் என்றால் சும்மாவா..விஜயை விமர்சித்த பார்த்திபன்!!
Next articleவிக்ரமை இழுத்தடித்த சேது திரைப்படம்!! விவேக் காட்டிய வழி!!