அஞ்சறை பெட்டியில் வைக்கும் பொருட்களில் கலப்படம் உள்ளதை கண்டறிய சிம்பிள் டிப்ஸ் இதோ!!

Photo of author

By Divya

தற்பொழுது உணவுப் பொருட்களில் அதிகளவு கலப்படம் நடைபெறுகிறது.இதனால் நாம் உண்ணும் உணவு நஞ்சாக மாறுகிறது.நாம் சமையலில் பயன்படுத்தும் பொருட்களில் கலப்படம் இருப்பதை கண்டறிய சில எளிய வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1)சர்க்கரை

இனிப்பு சுவை நிறைந்த சர்க்கரையில் சுண்ணாம்பு சேர்க்கப்படுகிறது.ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து தண்ணீர் ஊற்றி கரையும் வரை விடுங்கள்.சர்க்கரை தண்ணீரில் வெள்ளை நிற கலவை தென்பட்டால் அதில் சுண்ணாம்பு கலக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.

2)கொத்தமல்லி தூள்

ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி தூள் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.இதில் கலப்படம் செய்யப்பட்டிருந்தால் அது தண்ணீரில் மிதக்கும்.தூய மல்லி பொடியாக இருந்தால் அவை அடியில் தேங்கும்.

3)மஞ்சள் தூள்

ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும்.இப்படி செய்யும் பொழுது மஞ்சள் கட்டி போன்று தென்பட்டால் அதில் சுண்ணாம்பு கலக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.

4)மிளகாய் தூள்

ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி மிளகாய் தூள் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும்.மிளகாய் தூள் அடியில் அதிகளவு தேங்கினால் அதில் செம்மண் தூள் கலக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.

5)கடுகு

இந்த கடுகை தொட்டு கையில் நசுக்க வேண்டும்.இப்படி செய்யும் பொழுது கடுகில் இருந்து மஞ்சள் நிறத்தில் தென்பட்டால் அது கலப்படம் இல்லாத கடுகாகும்.

6)மிளகு

தண்ணீரில் மிளகு விதை போட்டால் அவை நீருக்கு அடியில் தேங்க வேண்டும்.ஒருவேளை மிதந்தால் அது பப்பாளி விதையாக இருக்கக் கூடும்.மிளகில் அதிகளவு பப்பாளி விதை கலப்படம் செய்யப்படுகிறது.

7)சீரகம்

தண்ணீரில் சீரகத்தை போட்டால் நீர் சுத்தமாக இருக்க வேண்டும்.சிலர் எடை வர வேண்டும் என்பதற்காக தூசி,மரத் தூள்,மண் போன்றவற்றை கலக்கின்றனர்.

8)நெய்

நிறம்,வாசனையை கொண்டு நெயில் கலப்படம் இருப்பதை கண்டுபிடிக்கலாம்.சுத்தமான நெய் அதிக வாசனையை கொண்டிருக்கும்.கலப்படம் செய்யபட்ட நெய் அடர் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

9)உப்பு

தற்பொழுது உப்பிலும் அதிகளவு கலப்படம் நடைபெறுகிறது.உப்பில் கலப்படம் செய்யப்பட்டிருப்பதை கண்டறிய ஒரு கிளாஸில் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்க்க வேண்டும்.அவை கரைந்த பிறகு தண்ணீர் தூய்மையாக இருந்தால் அது கலப்படம் செய்யப்படவில்லை என்று அர்த்தம்.அதுவே கலப்படம் இருந்தால் தண்ணீர் நிறம் மாறி இருக்கும்.