வாய் அல்சர் புண்கள் குணமாக.. இந்த கீரையை பச்சையாக மென்று சாப்பிடுங்கள் போதும்!!

Photo of author

By Divya

ஒவ்வொரு மனிதருக்கும் உணவு மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.உயிர் வாழ்வதற்கான அடிப்படை விஷயங்களில் முதல் இடத்தில் இருப்பது உணவு தான்.ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் மட்டுமே நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ முடியும்.ஆனால் தற்பொழுது ஆரோக்கிய உணவுகளை உட்கொள்ள மக்கள் விரும்புவதில்லை.

சுவை மிகுந்த உணவுகள் மீதே மக்களுக்கு ஆர்வம் அதிகரிக்கிறது.சிலர் வேலைப்பளு காரணமாக சரியான நேரத்தில் உணவு உட்கொள்வதில்லை.இன்று பெரும்பாலானோர் காலை உணவையே மறந்துவிட்டனர்.மூன்றுவேளை உணவில் காலை உணவு தான் மிகவும் முக்கியான ஒன்றாகும்.காலை நேரத்தில் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொண்டால் தான் நாள் முழுவதும் புத்துணர்வுடன் செய்லபட முடியும்.

காலை உணவை தொடர்ந்து தவிர்த்து வந்தால் அல்சர் புண்கள் வந்துவிடும்.வயிறு அல்சர்,வாய் அல்சர் போன்றவை உணவை தவிர்ப்பதால் தான் வருகிறது.அல்சர் ஏற்பட்டால் வயிறு எரிச்சல்,வயிற்று வலி,மலம் கழிக்கும் சமயத்தில் ஆசனவாய் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

மேலும் வாய் ஓரங்களில் புண்கள் வருவதும் அல்சருக்கான அறிகுறிகளில் ஒன்று தான்.இந்த அல்சர் புண்களை மருந்து மாத்திரை ஏதும் இன்றி குணப்படுத்திக் கொள்வதற்கான வழிகள் இங்கு தரப்பட்டுள்ளது.வாய்ப்புண்கள் முற்றிலும் குணமாக மணத்தக்காளி கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த மணத்தக்காளி கீரை வாய்ப்புண்.குடல் அல்சர் புண்களை குணப்படுத்த உதவுகிறது.மணத்தக்காளி கீரை நம் நாட்டு மருத்துவத்தில் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படடுகின்றது.ஒரு கைப்பிடி மணத்தக்காளி இலையை கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்து வெறும் வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் அல்சர் புண்கள் ஆறிவிடும்.

அதேபோல் மணத்தக்காளி கீரையை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி அரைத்து ஜூஸாக பருகி வந்தாலும் அல்சர் புண்கள் ஆறிவிடும்.மணத்தக்காளி கீரையை கைகளால் கசக்கி அதில் இருந்து சாறு எடுத்து வாய் ஓரத்தில் வைத்தால் புண்கள் மெல்ல மெல்ல ஆறிவிடும்.

மணத்தக்காளி கீரையை வெயிலில் நன்கு உலர்த்தி பவுடர் பதத்திற்கு அரைத்து ஒரு கப் வெது வெதுப்பான நீரில் கலந்து பருகி வந்தால் வாய்ப்புண்,அல்சர் புண்கள் ஆறும்.மணத்தக்காளி கீரையில் ரசம்,மணத்தக்காளி சூப் செய்து பருகி வந்தால் அல்சர் புண்கள் விரைவில் ஆறிவிடும்.