2025 – 26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலை பிப்ரவரி 1 ஆகிய நாளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த பட்ஜெட் தாக்கலில் நடுத்தர வர்க்க மக்களுக்கான வரி விதிப்பில் நிவாரணம் கிடைக்கும் வகையில் மூன்று முக்கியமான அறிவிப்புகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.
அந்த 3 முக்கிய மற்றும் நடுத்தர மக்களுக்கு சாதகமான அறிவிப்புகள்:-
✓ நிலையான விலக்கு வரம்பு :-
சம்பளம் பெறக்கூடிய ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் நிலையான விளக்கு தற்பொழுது 75 ஆயிரம் ரூபாயாக இருக்கும் நிலையில் அது 1 லட்சம் ரூபாயாக உயர்த்த வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாக்கியுள்ளன. அவ்வாறு நிலையான விலக்கு 1 லட்சம் ரூபாயாக அதிகமானால் வரி விதிக்க கூடிய வருமானத்தின் அளவு குறையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
✓ வருமான வரி தள்ளுபடி :-
7 லட்சத்திற்கு மிகாமல் வருமானம் வருமானம் பெறக்கூடியவர்கள் வருமான வரி தள்ளுபடிக்கு தகுதி உடையவர்கள் என வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 87A வின் படி தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தற்பொழுது இதன் வரம்பை 1 லட்சம் அதிகரிக்கலாம் எனவும் 8 லட்சம் ரூபாயாக இது உயரலாம் என்றும் நிதி நிபுணர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
✓ புதிய வரி அடுக்குகள் :-
புதிய வழிமுறை அறிவிக்கப்பட்ட பொழுது உருவாக்கப்பட்ட வரி அடுக்குகளை தற்பொழுது மத்திய அரசு ஆனது மாற்ற வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பழைய வரி முறையில் எந்த மாற்றமும் செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் புதிய வழி முறையை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க அரசு பல நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக மத்திய அரசாணது இந்த பட்ஜெட்டில் ஒரு புதிய வரி அடுக்குகளை இதற்காக மத்திய அரசாணது இந்த பட்ஜெட்டில் புதிய வரி அடுக்குகளில் மாற்றத்தை மேற்கொள்ளும் என்றும் வரி நிபுணர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.