உடல் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பின் ஆரோக்கியமும் மேம்பட வேண்டும்.நாம் உண்ணும் உணவுகள் மூலமே உடல் உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.
குறிப்பாக குடலை ஆரோக்கியமாக வைத்திருந்தால் மட்டுமே உட்கொள்ளும் உணவும் செரித்து உடல் செயல்பாடு நன்றாக இருக்கும்.ஒருவேளை குடல் தன் ஆரோக்கியத்தை இழந்தால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
குடல் ஆரோக்கியம் இழந்தால் செரிமான அமைப்பு கடுமையாக பாதிக்கப்படும்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி முழுமையாக குறைந்துவிடும்.குடல் ஆரோக்கியம் என்பது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் உள்ளடக்கியதாகும்.அவ்வாறு இருக்கையில் குடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுவிடும்.
குடல் ஆரோக்கியம் இழந்ததை காட்டும் அறிகுறிகள்:
*வயிறு வீக்கம்
*வாயுத் தொல்லை
*பெருங்குடல் அலர்ஜி
*நெஞ்செரிச்சல்
*எடை இழப்பு
*செரிமானப் பிரச்சனை
*மலச்சிக்கல்
*வயிற்று வலி
*வயிறு எரிச்சல்
*தோல் எரிச்சல்
குடல் ஆரோக்கியம் மேம்பட உட்கொள்ள வேண்டிய உணவுகள்:
1)நார்ச்சத்து நிறைந்த உணவுகள்
தானியங்கள்,காய்கறிகள் மற்றும் பழங்களில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது.இந்த நார்ச்சத்து நிறைந்த உணவுகள் குடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
2)நீர்ச்சத்து
பழங்கள் மற்றும் காய்கறிகளில் நீர்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது.அதேபோல் தினமும் தேவையான அளவு தண்ணீர் பருகி வந்தால் குடல் ஆரோக்கியமாக இருக்கும்.பதப்படுத்தப்பட்ட உணவுகள்,காரம் நிறைந்த உணவுகளை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும்.குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த நல்ல பாக்டீரியா உள்ள உணவுகளை அதிகளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
3)குடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உணவு பழக்கத்தோடு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும்.