யூரிக் ஆசிட் லெவல் சட்டுனு குறைய.. இந்த ஜூஸ் செய்து ஒரு கிளாஸ் குடித்தாலே போதும்!!

Photo of author

By Divya

Uric Acid: நாம் உண்ணும் உணவில் பியூரின் அதிகமாக இருந்தால் உடலில் யூரிக் அமில அளவு அதிகரிக்கும்.இந்த யூரிக் அமிலம் ஒரு இரசாயன கழிவாகும்.இந்த யூரிக் அமிலம் உடலில் மோசமான பாதிப்புகளை உண்டாக்கிவிடும்.

இந்த பாதிப்பை கவனிக்க தவறினால் சிறுநீரக கல்,மூட்டு வலி,கீழ் வாத வலி போன்றவை ஏற்படக்கூடும்.

யூரிக் அமில அறிகுறிகள்:-

1)இருதய நோய்
2)நீரிழிவு பாதிப்பு
3)சிறுநீரக பாதிப்பு
4)உயர் இரத்த அழுத்தம்
5)வளர்சிதை மாற்றம்
6)கடுமையான மூட்டு வலி
7)மூட்டு சிவந்து போதல்
8)மூட்டு வீக்கம்
9)சிறுநீரக கற்கள்
10)கீழ் வாதம்

யூரிக் அமிலம் உருவாக காரணங்கள்:-

1)பியூரின்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளல்
2)மது பழக்கம்
3)ஆரோக்கியம் இல்லாத உணவுப்பழக்கம்

யூரிக் அமிலத்தை கட்டுக்குள் வைக்கும் மூலிகை ஜூஸ்:

தேவையான பொருட்கள்:

1.எலுமிச்சம் பழச்சாறு – இரண்டு தேக்கரண்டி
2.இலவங்கப்பட்டை பொடி – ஒரு தேக்கரண்டி
3.தேன் – தேவையான அளவு
4.மஞ்சள் பொடி – சிட்டிகை அளவு
5.வெள்ளரி பிஞ்சு – ஒன்று
6.மாதுளம் பழம் விதை – கால் கப்

செய்முறை:

ஸ்டெப் 01:

வெள்ளரி பிஞ்சை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு மாதுளம் பழத்தை கட் செய்து அதில் இருந்து விதையை எடுத்துக் கொள்ளுங்கள்.

ஸ்டெப் 02:

அடுத்து எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி விதையை நீக்கிவிட்டு சாறை மட்டும் பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள்.

ஸ்டெப் 03:

பிறகு இலவங்கப்பட்டையை மிக்சர் ஜாரில் போட்டு நைஸ் பவுடராக அரைத்துக் கொள்ளுங்கள்.அடுத்து அதில் வெள்ளரி பிஞ்சு,மாதுளம் பழ விதை சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஸ்டெப் 04:

பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.இதை ஒரு கிளாஸிற்கு மாற்றி பிழிந்து வைத்துள்ள எலுமிச்சை சாறை சேர்த்து கலக்குங்கள்.

ஸ்டெப் 05:

அதன் பிறகு சிட்டிகை அளவு மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு தேன் சேர்த்து பருக வேண்டும்.இந்த ஜூஸை அடிக்கடி செய்து பருகி வந்தால் யூரிக் அமில அளவு கட்டுப்படும்.

அதேபோல் உடலில் யூரிக் அமிலத்தின் அளவு குறைய தினமும் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.ஆரோக்கியம் நிறைந்த உணவுகள் மற்றும் பானங்களை அருந்த வேண்டும்.