இன்றைய நவீன உலகில் உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.இன்று பெரும்பாலானோர் ஆரோக்கியம் இல்லாத உணவுகளை தான் விரும்பி உண்கின்றனர்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்,கொழுப்பு நிறைந்த இறைச்சி மற்றும் உணவுகள்,பாஸ்ட்புட்,ஜங்க் புட் போன்றவை பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு வழிவகுக்கிறது.குறிப்பாக இதய நோய் பாதிப்பு நாம் பின்பற்றும் உணவுமுறை பழக்கத்தால் தான் ஏற்படுகிறது.
இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நாம் ஊட்டசத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகளவு சாப்பிட வேண்டும்.ஆரோக்கிய வாழ்விற்கு முதன்மையானது உணவு தான்.ஆனால் நாம் பின்பற்றி வரும் மோசமான உணவுகள் இதய நோய் பாதிப்பிற்கு வழிவகுக்கிறது.
முன்பெல்லாம் வயதானவர்கள் மட்டுமே இதய நோய் பாதிப்பை சந்தித்து வந்தனர்.ஆனால் தற்பொழுது இளம் தலைமுறையினருக்கு தான் மாரடைப்பு உண்டாகிறது.நன்றாக விளையாடி கொண்டிருந்த பிள்ளை திடீரென்று மயங்கி உயிரிழந்துவிட்டது என்ற செய்தியை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
இப்படி சத்தமே இல்லாமல் உயிரை பறிக்கும் நோயாக மாரடைப்பு இருக்கிறது.மாரடைப்பு வர காஃபின்,சர்க்கரை நிறைந்த பானங்களும் முக்கிய காரணமாக இருக்கிறது.சிலர் ஒரு நாளைக்கு நான்கு ஐந்து காபி குடிப்பவர்கள் இருக்கின்றனர்.இந்த காபியில் காஃபின் என்ற வேதிப்பொருள் இருக்கிறது.
அதிகளவு காபி குடித்தால் இரத்த அழுத்தம் அதிகரித்து மாரடைப்பிற்கு வழிவகுத்துவிடும்.அதேபோல் பழச்சாறில் சர்க்கரை சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.டீ,காபி,பழச்சாறில் அதிகளவு சர்க்கரை சேர்த்துக் கொண்டால் இதய ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.
அதேபோல் கெட்ட கொழுப்பு நிறைந்த உணவுகள் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.புரதச்சத்து நிறைந்த முட்டை ஆரோக்கியமானது என்றாலும் முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகரித்து மாரடைப்பிற்கு வழிவகுத்துவிடும்.ஆகவே ஆரோக்கியமான உணவுமுறையை பின்பற்றி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.
அதிக கொழுப்பு உணவுகள்,எண்ணெய் நிறைந்த உணவுகளை தவிர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.