உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவை எப்பொழுதும் கட்டுக்குள் வைத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள பான செய்முறையை பின்பற்றுங்கள்.
தீர்வு 01:-
1)வேப்பம் பிசின் பொடி – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
வேப்பம் பிசின் பொடி நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.தங்களுக்கு தேவையான அளவு வாங்கி பயன்படுத்துங்கள்.
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி வேப்பம் பிசின் பொடி சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வையுங்கள்.
பிறகு இந்த பானத்தை ஒரு கிளாஸிற்கு ஊற்றி பருகி வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
தீர்வு 02:-
1)சுக்கு பொடி – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி சுக்கு பொடி சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
பிறகு இந்த பானத்தை கிளாஸிற்கு ஊற்றி பருகினால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
தீர்வு 03:-
1)ஏலக்காய் – ஒன்று
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
முதலில் ஏலக்காயை உரலில் போட்டு லேசாக தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு பாத்திரம் ஒன்றில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.
பிறகு தட்டி வைத்துள்ள ஏலக்காயை அதில் போட்டு மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி பருகி வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
தீர்வு 04:-
1)ஆவாரம் பூ – இரண்டு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
ஆவாரம் பூவை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஆவாரம் பூவை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
பின்னர் இந்த பானத்தை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி பருகினால் இரத்த சர்க்கரை அளவு நார்மல் நிலைக்கு வரும்.