படித்துக் கொண்டே வேலை பார்க்கும் மாணவர்களை குறி வைத்த அமெரிக்கா அரசு!! நிதி சுமையில் தத்தளிக்கும் இந்திய பெற்றோர்கள்!!

0
5
The US government has targeted students who work while studying!! Indian parents reeling under financial burden!!
The US government has targeted students who work while studying!! Indian parents reeling under financial burden!!

அமெரிக்க கல்வி நிறுவனங்களில் படித்துக் கொண்டிருக்கக் கூடிய இந்திய மாணவர்கள் மீது அதாவது படித்துக் கொண்டே பார்ட்டையும் வேலை பார்க்கக்கூடிய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவ்வாறு நிகழ்ந்தால் அமெரிக்காவில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு அவர்களுடைய கல்வி கனமானது வீணாகிவிடும்.

பொதுவாக அமெரிக்காவில் இருக்கக்கூடிய சூப்பர் மார்க்கெட் பெட்ரோல் பங்க் மற்றும் ஹோட்டல்கள் போன்றவற்றில் அமெரிக்கர்கள் பணிபுரிந்தால் அவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 20 முதல் 30 டாலர்கள் வரை சம்பளமாக வழங்கப்படும் நிலையில் இந்திய மாணவர்களுக்கு வெறும் 6 முதல் 10 டாலர் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக ட்ரம்ப் அதிபராக பதவியேற்ற பின் இந்திய ரூபாயின் மதிப்பானது அமெரிக்க டாலரின் மதிப்பை விட குறைந்து வருகிறது.

இந்த சூழலில் அமெரிக்காவில் படிக்கக்கூடிய இந்திய மாணவர்களுடைய பெற்றோருக்கு தற்பொழுது அதிக அளவில் நிதி சுமை ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே அமெரிக்காவில் முறைகேடான முறைகளில் குடியேறியவர்களை காலி செய்யும் விதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தற்பொழுது இந்திய மாணவர்கள் படித்துக் கொண்டே பார்ட் டைம் இல் வேலை பார்க்கும் பொழுது அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருப்பது இந்திய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே மிகப்பெரிய வருத்தத்தை உருவாக்கியுள்ளது.

Previous articleமூத்த குடிமக்களுக்கான ஆயுஷ்மான் பாரத் திட்டம்.. வீட்டிலிருந்தே ரூ.5,00,000 பெறலாம்!!
Next article10 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு தேதிகள் அறிவிப்பு!! மதிப்பெண் விவரங்களுடன்!!