புதிய வீடு வாங்குபவர்களின் கவனத்திருக்கு!!வரி சலுகைகள் அப்டேட்!!

Photo of author

By Gayathri

2025 மற்றும் 26 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் நேற்று துவங்கியது.

இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக நிதிநிலை அறிக்கையை வழங்குவது வழக்கமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. பொதுவாக பட்ஜெட் தாக்கல் ஆனது ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தின் இறுதி நாட்களில் வெளியிடப்படும் நிலையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் தொடங்கப்படுவதாகவும் எட்டாவது முறையாக நிர்மலா சீதாராமன் அவர்கள் பட்ஜெட் தாக்கல் செய்வது பெருமைக்குரிய விஷயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :-

✓ பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு வாங்குபவர்களுக்கு அதிக ஒதுக்கீடு தர இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

✓ குறிப்பாக, வீடு வாங்குபவர்களை ஊக்குவிக்கும் விதமாக கடனுடன் கூடிய மானியம் அமல்படுத்த இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

✓ வீடு வாங்கக் கூடியவர்கள் தற்பொழுது செலுத்தி வரக்கூடிய முத்திரை கட்டணமானது மிக அதிகமாக இருப்பதாகவும் அதனால் சொத்தின் உடைய மதிப்பு அதிக அளவு உள்ளது என்றும் கவலை தெரிவித்ததை ஒட்டி முத்திரை வரிகள் சீரான மற்றும் குறைக்கப்பட்ட கட்டணங்களாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

✓ முக்கியமாக பொருளாதார அறிக்கையில் இந்திய ரியல் எஸ்டேட் சிறப்பாக செயல்பட்டதாக தெரிவிக்கப்பட்டதுடன், ரியல் எஸ்டேட் துறைக்கு பல நன்மைகள் கொண்டுவரப்பட்டதாகவும் பொருளாதார அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.