இந்த ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் ஆனது தற்பொழுது நடைபெற்று வரும் நிலையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் மூத்த குடிமக்கள் மற்றும் வீட்டினை வாடகைக்கு விட்டு வருமானம் ஈட்டுபவர்களுக்கான முக்கிய வரி சலுகைகளை தற்பொழுது வெளியிட்டிருக்கிறார்.
மூத்த குடிமக்களுக்கான முக்கிய வரிசலுகை :-
இதுவரை மூத்த குடிமக்களுக்கு பிடித்தம் செய்யப்பட்டு வந்த வருமான வரி உச்சவரம்பானது தற்பொழுது 50,000 ரூபாயிலிருந்து தற்பொழுது 1 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுவதாக தெரிவித்திருக்கிறார்.
வீட்டு வாடகைதாரர்களுக்கான TDS உச்சவரம்பு :-
வீட்டினை வாடகைக்கு விட்டு வருமானம் ஈட்டக் கூடியவர்களுக்கு பிடிக்கப்படும் TDS ஆனது இதுவரை ரூ.2.40 லட்சமாக இருந்தது. அதனை தற்போது 6 லட்சம் ரூபாயாக உயர்த்துவதாகவும் இவ்வாறு செய்வதன் மூலம் குறைந்த வருமானத்தில் வாழக்கூடியவர்கள் செலுத்தும் வரியில் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனை தொடர்ந்து இந்த பட்ஜெட்டில் சாலைகள் மற்றும் இந்திய ரயில்வே போன்றவற்றின் மேம்பாட்டை குறித்து முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அதற்கான நிதி ஒதுக்கீடானது உயர்த்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக புதிய வருமான வரி முறைகள் மற்றும் வரி அடுக்குகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.