இந்த ட்ரிங்க் குடித்தால்.. நீண்ட நாட்களாக அடைபட்டு கிடந்த மலக் கழிவுகள் முந்திகிட்டு வெளியேறும்!!

Photo of author

By Divya

நம் உணவில் சேர்க்கப்படும் வாசனை நிறைந்த கறிவேப்பிலை பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.இந்த கறிவேப்பிலையின் வாசனைக்காகவே பலரும் இதை உணவில் சேர்த்துக் கொள்கின்றனர்.

இந்த கறிவேப்பிலையில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள நோய்களை குணப்படுத்த உதவுகிறது.கறிவேப்பிலையில் அடங்கியுள்ள நார்ச்சத்து செரிமானப் பிரச்சனை,மலச்சிக்கல் போன்ற பாதிப்புகளை குணப்படுத்துகிறது.

ஆரோக்கியம் இல்லாத உணவுகளை உட்கொள்வதால் மலச்சிக்கல்,செரிமானக் கோளாறு,வயிறு வீக்கம்,வாயுத் தொல்லை போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.தொடர்ந்து ஆரோக்கியம் இல்லாத உணவுகளை உட்கொள்வதால் கடுமையான மலச்சிக்கல் பிரச்சனை ஏற்பட்டு உடல் நலப் பிரச்சனை ஏற்படுகிறது.இந்த மலச்சிக்கல் பாதிப்பை கறிவேப்பிலை பானம் பருகி சரி செய்து கொள்ளுங்கள்.

மலச்சிக்கல் அறிகுறி:

1)வயிறு வீக்கம்
2)துர்நாற்ற வாயு
3)வயிறு வலி
4)வயிறு இறுக்கம்

கறிவேப்பிலையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:

1)மெக்னீசியம்
2)கால்சியம்
3)வைட்டமின்கள்
4)தாமிரம்
5)பாஸ்பரஸ்
6)இரும்புச்சத்து
7)நார்ச்சத்து

கறிவேப்பிலை பானம் செய்முறை:

தேவையான பொருட்கள்:-

1.கறிவேப்பிலை – ஒரு கொத்து
2.தண்ணீர் – ஒரு கப்

செய்முறை விளக்கம்:

**முதலில் ஒரு கொத்து கறிவேப்பிலையை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

**பின்னர் அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு ஒரு கொத்து கறிவேப்பிலையை அதில் போட்டு குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

**பிறகு அடுப்பை அணைத்துவிட்டு கறிவேப்பிலை பானத்தை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.காலை நேரத்தில் இந்த பானத்தை பருகி வந்தால் மலக்குடலில் தேங்கிய கழிவுகள் உடனடியாக அடித்துக் கொண்டு வெளியேறும்.

**தினமும் 10 கறிவேப்பிலையை வெறும் வாயில் மென்று சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.