ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடைபெற இருப்பதை ஒட்டி ஈரோட்டில் 4 நாட்களுக்கு டாஸ்மார்க் கடைகள் விடுமுறை என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த இ வி கே எஸ் இளங்கோவன் அவர்கள் மறைந்ததை அடுத்து அது தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியானது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக தேமுதிக மற்றும் பாஜக போன்ற கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவிப்பை வெளியிட்டனர்.
ஆனால் பிப்ரவரி 5 ஆம் தேதி நடக்க இருக்கிற இது தேர்தலில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி உட்பட 46 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் என அனைத்திற்கும் தமிழக அரசு விடுமுறை விட்டதுடன் தமிழகத்தில் வேறு ஏதேனும் இடங்களில் பணிபுரிந்து கொண்டிருக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கும் அன்றைய தினம் விடுமுறை என்று அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறது.
குறிப்பாக, பிப்ரவரி 3 முதல் பிப்ரவரி 5 வரை மற்றும் பிப்ரவரி 8 ஆகிய தேதிகளில் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள டாஸ்மார்க் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த விடுமுறையானது ஈரோடு மாவட்டத்தில் செயல்படக்கூடிய எப்எல்2, எஃப் எல் 3 மற்றும் அனைத்து டாஸ்மார்க் மற்றும் அவற்றுடன் இணைந்து இருக்கக்கூடிய பார்கள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை மீறி டாஸ்மார்க் கடைகளில் அல்லது வெளியில் மதுபானங்களை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.