நாம் உரிய நேரத்தில் உணவு உட்கொள்ளாமல் இருந்தால் நாளடைவில் வயிற்றில் புண்கள் தோன்றிவிடும்.இதை இரைப்பை புண்கள் என்றும்,பெப்டிக் என்றும் அழைக்கின்றோம்.இந்த அல்சர் பாதிப்பை அலட்சியமாக கருதி குணப்படுத்திக் கொள்ள தவறினால் அவை கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
அல்சர் வர காரணங்கள்:-
1.உணவு உட்கொள்ளாமல் இருத்தல்
2.அதிக காரம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுதல்
3.மன அழுத்தம்
அல்சர் அறிகுறிகள்:-
1.வயிற்று வலி
2.வயிறு பிடிப்பு
3.குமட்டல் மற்றும் வாந்தி உணர்வு
4.பசியின்மை
5.திடீர் உடல் எடை குறைவு
6.செரிமானப் பிரச்சனை
7.ஆசனவாய் எரிச்சல்
8.கருப்பு நிறத்தில் மலம் வெளியேறுதல்
அல்சர் பாதிப்பை சரி செய்யும் நம் பாரம்பரிய வைத்தியம்:
தேவையான பொருட்கள்:-
1)முட்டைகோஸ் இலை – ஒன்று
2)தேன் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
**முதலில் ஒரு முட்டைகோஸ் இலையை தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
**பிறகு இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து இதை ஒரு மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
**பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.பின்னர் இந்த முட்டைகோஸ் ஜூஸில் ஒரு தேக்கரண்டி அளவு தூயத் தேன் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.
**இந்த பானத்தை தினம் ஒரு கிளாஸ் பருகி வந்தால் அல்சர் புண்கள் முழுமையாக குணமாகிவிடும்.
தேவையான பொருட்கள்:-
1)தயிர் – ஒரு கிளாஸ்
2)கறிவேப்பிலை – ஐந்து இலைகள்
செய்முறை விளக்கம்:-
**முதலில் ஒரு கிளாஸ் அளவிற்கு கெட்டியான தயிர் எடுத்துக் கொள்ள வேண்டும்.பாக்கெட் தயிரை விட பசும் பால் தயிர் அல்சர் புண்களை சீக்கிரம் குணப்படுத்தும்.
**அடுத்து ஐந்து கறிவேப்பிலை இலைகளை மிக்சர் ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
**இதை கெட்டி தயிரில் போட்டு நன்றாக மிக்ஸ் செய்து சாப்பிட்டு வந்தால் அல்சர் புண்கள் சீக்கிரம் ஆறிவிடும்.