தற்பொழுது பெரியவர்கள்,சிறியவர்கள் என்று அனைவருக்கும் முழங்கால் வலி,மூட்டு வலி பாதிப்பு அதிகரித்து வருகிறது.
முழங்கால் வலிக்கான காரணங்கள்:-
1)வயது முதுமை
2)மூட்டு வீக்கம்
3)தீராத காய்ச்சல்
4)நடப்பதில் சிரமம்
5)கீழ் வாதம்
தேவையான பொருட்கள்:-
1)மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
2)கிராம்பு – நான்கு
3)துளசி இலைகள் – கால் கப்
4)இஞ்சி துண்டு – ஒரு பீஸ்
5)தேன் / எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
முதலில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் சொல்லிய அளவுப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்தாக இந்த பொருட்களை வைத்து முழங்கால் வலியை போக்கும் அற்புத பானம் தயாரிக்கும் முறை குறித்து காண்போம்.
முதலில் அடுப்பில் பாத்திரம் வைத்து ஓரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அடுத்து நான்கு கிராம்பு மற்றும் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
அடுத்து ஒரு பீஸ் இஞ்சி துண்டை தோல் நீக்கிவிட்டு உரலில் போட்டு இடித்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை கொதிக்கும் பானத்தில் போடவும்.
அதன் பிறகு கால் கப் அளவிற்கு துளசி இலைகளை தண்ணீரில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.இதை கொதிக்கும் பானத்தில் போடவும்.இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வரை பானம் கொதிக்க வேண்டும்.
பிறகு இந்த பானத்தை கிளாஸ் ஒன்றில் வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து பருக வேண்டும்.தொடர்ந்து 30 நாட்கள் பருகி வந்தால் முழங்கால் வலி குறைந்துவிடும்.
முழங்கால் வலிக்கு மற்றொரு தீர்வு:-
தேவையான பொருட்கள்:-
1)எள் – 50 கிராம்
2)வெல்லம் – கால் கப்
3)வேர்க்கடலை – கால் கப்
4)பாதாம் பருப்பு – 10
5)முந்திரி பருப்பு – 10
செய்முறை விளக்கம்:-
முதலில் 50 கிராம் அளவிற்கு எள் எடுத்து வாணலியில் போட்டு வறுக்க வேண்டும்.பிறகு இதை தட்டிற்கு மாற்றிவிட்டு வேர்க்கடலை போட்டு குறைவான தீயில் வறுக்க வேண்டும்.
பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு பத்து முந்திரி மற்றும் பத்து பாதாம் பருப்பை அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.
இறுதியாக கால் கப் பொடித்த வெல்லம் சேர்த்து பவுடர் பதம் வரும் வரை அரைக்க வேண்டும்.பிறகு இதை ஒரு தட்டில் கொட்டி சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த உருண்டை தினம் ஒன்று என்ற எண்ணிக்கையில் சாப்பிட்டு வந்தால் முழங்கால் வலியில் இருந்து முழுமையாக மீண்டுவிடலாம்.