இன்று அனைவருக்கும் வாய்துர்நாற்றம் பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது.எத்தனை முறை பல் துலக்கினாலும் சிலருக்கு வாய் துர்நாற்றம் மட்டும் நீங்கியபாடில்லை.வாயில் இருந்து கெட்ட வாடை வீசும் என்பதால் சிலர் பேசவே தயக்கமடைகின்றனர்.
இந்த வாய் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த சாக்லேட்,சூயிங்கம் போனற்வற்றை எடுத்துக் கொண்டாலும் சில மணி நேரம் மட்டுமே தீர்வளிக்கும்.வாய் துர்நாற்றத்தில் இருந்து முழுமையாக மீள சில வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும்.
வாய் துர்நாற்றம் வீச காரணங்கள்:-
1)உணவுத் துகள்கள் பல் இடுக்குகளில் தேங்கி பாக்டீரியாக்கள் உருவாவதால் வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது.
2)நாக்கில் அழுக்குகள் படிவதால் வாய் துர்நாற்றம் வீசுகிறது.
3)சொத்தைப்பல்,ஈறு வீக்கம் போன்ற காரணங்களால் வாய் துர்நாற்றம் வீசுகிறது.
4)பல் பராமரிப்பின்மை காரணமாக வாய் துர்நாற்றம் வீசுகிறது.
5)புகையிலை,சிகிரெட் பிடிப்பது போன்ற செயல்களால் வாய் துர்நாற்றம் வீசுகிறது.
6)பற்களில் கறை படிவதால் வாய்துர்நாற்றம் வீசத் தொடங்குகிறது.
வாய் துர்நாற்றத்தை போக்க சிறந்த வழிகள்:-
**தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் பல் துலக்குவதை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
**நாக்கில் படியும் அழுக்குகளை டங்க் கிளீனர் கொண்டு சுத்தம் செய்துவிட வேண்டும்.
**உணவு உட்கொண்ட பிறகு தண்ணீர் கொண்டு வாய் கொப்பளிக்க வேண்டும்.
**சொத்தை பற்கள் இருந்தால் அதை அகற்றிவிட வேண்டும்.அதேபோல் பற்களில் உள்ள கறைகளை பல் மருத்துவர் உதவியுடன் அகற்றிவிட வேண்டும்.
**பெருஞ்சீரகம்,கிராம்பு,பட்டை ஆகிய மூன்றை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் கட்டுப்படும்.
**மூலிகை பல்பொடி பயன்படுத்தி வருவதன் மூலம் வாய் துர்நாற்றத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.
**துளசி,வேப்பங் கொழுந்தை உலர்த்தி பொடித்து நீரில் கலந்து வாய் கொப்பளித்தால் வாயில் உள்ள பாக்டீரியா அழிக்கப்படும்.