பல்கலைக் கழகங்களில் உள்ள ஆசிரியர்களின் பற்றாக்குறையை ஈடு செய்யும் விதமாக பல்கலைக் கழகங்களில் தற்பொழுது பணி புரியும் ஆசிரியர்களின் ஓய்வு வயதை 60 இருந்து 65 ஆக உயர்த்தி தெலுங்கானா மாநிலம் அறிவித்திருக்கிறது.
மேலும் இது இந்தியாவில் இருக்கக்கூடிய மாநில பல்கலைக்கழகங்களில் 2013 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பு நடைபெற்றதாகவும் அதன் பின் தற்பொழுது வரை ஆட்சேர்ப்பு நடைபெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு 2800 ஆசிரியர்கள் பணி புரிய வேண்டிய இடத்தில் தற்பொழுது 750 ஆசிரியர் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டு இருப்பதாகவும் இதனால்தான் ஓய்வு வயதை 60 லிருந்து 65 ஆக உயர்த்தி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்வதன் மூலம் அனுபவம் மிக்க ஆசிரியர்களை தக்க வைப்பது மற்றும் கற்பித்தல் தரம் என பல்கலைக் கழகத்தினுடைய தரமானது உயர்த்தப்படுவதற்கு உதவியாக இருக்கும் என்றும் தெலுங்கானா அரசு தெரிவித்திருக்கிறது.