இந்த டிப்ஸை பின்பற்றினால்.. எந்த வயதிலும் ஹார்ட் அட்டாக் உங்களை நெருங்கவே யோசிக்கும்!!

Photo of author

By Divya

இன்றைய காலகட்டத்தில் நாம் உடல் சார்ந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.கடந்த காலங்களைவிட தற்பொழுது உடல் நலக் கோளாறால் அடிக்கடி மருத்துவமனைக்கு செல்லும் நிலை உருவாகிவிட்டது.

இதற்கு முக்கிய காரணம் நடைமுறையில் உள்ள உணவுப் பழக்க வழக்கங்கள் தான்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உடல் சார்ந்த பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.தற்பொழுது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் எளிதில் நோய்த் தொற்று அபாயம் ஏற்படுகிறது.

ஜங்க் புட்,பாஸ்ட் புட்,பதப்படுத்திய உணவுகள்,ஒருமுறை பயன்படுத்திய எண்ணையை மீண்டும் உணவு சமைக்க பயன்படுத்துதல்,கொழுப்பு உணவுகளால் தான் இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்படுகிறது.

தற்பொழுது முதியவர்களைவிட இளம் வயதினர் தான் மாரடைப்பு பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.யாருக்கு எப்பொழுது மாரடைப்பு வரும் என்று சொல்லமுடியாத வாழ்க்கைமுறையை நாம் பின்பற்றி வருகின்றோம்.

ஆரோக்கியம் இல்லாத உணவுகளால் உடலில் கொலஸ்ட்ரால் பாதிப்பு அதிகரிக்கிறது.இதனால் மாரடைப்பு,பக்கவாதம் போன்ற உயிருக்கு ஆபத்தான பாதிப்புகள் உண்டாகிறது.மாரடைப்பு ஏற்பட்டால் முதலில் இரத்தம் உறையத் தொடங்கும்.பிறகு உயிருக்கு ஆபத்தான நிலை மாறிவிடும்.

மாரடைப்பு பாதிப்பிற்கான காரணங்கள்:-

1)ஆரோக்கியம் இல்லாத உணவுகள்
2)இரத்த அழுத்தம்
3)அதிக சோடியம் நிறைந்த உணவுகள்
4)பக்கவாதம்
5)இரத்தம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள்
6)மருந்து ஒவ்வாமை

மாரடைப்பு வருவதை தடுக்கும் உணவுகள்:-

*பச்சை காய்கறிகள் மற்றும் பழங்கள்

தினமும் உணவில் பச்சை காய்கறிகளை அதிகளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.உடல் எடையை குறைக்கும் பழங்களை உட்கொள்ள வேண்டும்.இதை தொடர்ந்து செய்து வந்தால் மாரடைப்பில் இருந்து தப்பித்துவிடலாம்.

*மூலிகை பானம்

இஞ்சி மற்றும் பூண்டு கொண்டு மூலிகை தேநீர் செய்து பருகி வந்தால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்படும்.இதனால் மாரடைப்பு பாதிப்பில் இருந்து தங்களை காத்துக் கொள்ள முடியும்.

*நார்ச்சத்து உணவுகள்

நீங்கள் உட்கொள்ளும் உணவில் நார்ச்சத்து இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உடலில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கிறது.

*உடற்பயிற்சி

தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்தால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.அதேபோல் யோகா,தியானம் போன்றவற்றை செய்து வந்தால் மன அழுத்தம் குறையும்.இதனால் மாரடைப்பு ஏற்படுவது தடுக்கப்படும்.

*தூக்கம்

தினமும் 8 முதல் 10 மணி நேரம் உறக்கத்தின் மூலம் இதய நோய் பாதிப்பை தடுத்துவிடலாம்.நிம்மதியான தூக்கம் இல்லாவிட்டால் இதய நோய் பாதிப்பு அதிகரித்துவிடும்.