உடலில் நோய் எதிர்ப்பு மண்டல கோளாறால் உருவாகும் பாதிப்பை தான் சொரியாசிஸ் என்று அழைக்கின்றோம்.இந்த சொரியாசிஸ் பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைய நம் பாரம்பரிய வைத்திய முறைகளை பின்பற்றலாம்.
சொரியாசிஸ் வருவதற்கான காரணங்கள்:
*பரம்பரைத் தன்மை
*தோல் தடிப்பு
*தோல் அலர்ஜி
சொரியாசிஸ் வருவதற்கான அறிகுறிகள்:
*தோல் சிவந்து போதல்
*தோலில் திட்டுகள் தென்படுதல்
*தோல் எரிச்சல்
*தோல் அரிப்பு
*தோல்களில் செதில் போன்று உருவாதல்
*நகத்தில் பாதிப்பு
*கடுமையான மூட்டுவலி
தேவையான பொருட்கள்:-
1)கருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)இஞ்சி – ஒரு துண்டு
3)கிராம்பு – இரண்டு
4)நல்லெண்ணெய் – மூன்று தேக்கரண்டி
5)கட்டி பெருங்காயம் – ஒரு பீஸ்
செய்முறை விளக்கம்:-
1.முதலில் ஒரு துண்டு இஞ்சை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.
2.அடுத்து உரல் ஒன்றில் இந்த இஞ்சி பீஸ் சேர்த்துக் கொள்ள வேண்டும்.பிறகு இரண்டு கிராம்பு மற்றும் ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகத்தை அதில் போட்டு கொரகொரப்பாக இடித்துக் கொள்ள வேண்டும்.
3.அடுத்து அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து மூன்று தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.
4.பிறகு இடித்த கருஞ்சீரக கலவையை அதில் கொட்ட வேண்டும்.அடுத்து அதில் ஒரு பீஸ் கட்டி பெருங்காயத்தை போட்டு மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
5.இந்த எண்ணெயை ஆறவைத்து சொரியாசிஸ் பாதித்த இடங்களில் அப்ளை செய்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
சொரியாசிஸ்க்கு மற்றொரு தீர்வு:-
தேவையான பொருட்கள்:-
1)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
2)கறிவேப்பிலை – ஒரு கொத்து
செய்முறை விளக்கம்:-
1.முதலில் ஒரு கிண்ணத்தில் ஒரு கிளாஸ் அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி வெந்தயம் போடவும்.
2.அதன் பிறகு ஒரு கொத்து லறிவேப்பிலை இலைகளை போட்டு நாள் முழுவதும் ஊறவிடவும்.பிறகு இதைமிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
3.இந்த பேஸ்டை சொரியாசிஸ் பாதித்த இடங்களில் அப்ளை செய்தால் அவை சீக்கிரம் குணமாகிவிடும்.
தேவையான பொருட்கள்:-
1)வேப்பிலை – ஒரு கப்
2)மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
3)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
1.முதலில் ஒரு கப் வேப்பிலையை தண்ணீரில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
2.பிறகு வெந்தயத்தை ஒரு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் ஊறவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
3.இப்பொழுது ஒரு மிக்சர் ஜாரை எடுத்து சுத்தம் செய்து வைத்துள்ள வேப்பிலையை போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஊறவைத்த வெந்தயத்தை போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
4.பிறகு இந்த பேஸ்ட்டில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து கலந்து சொரியாசிஸ் மீது தடவினால் அவை சீக்கிரம் குணமாகிவிடும்.