சர்வதேச செஸ் போட்டி!! வென்றது குகேஷா? பிரக்ஞானந்தாவா?

Photo of author

By Gayathri

சர்வதேச செஸ் போட்டி!! வென்றது குகேஷா? பிரக்ஞானந்தாவா?

சமீபத்தில் நெதர்லாந்து நாட்டின் வீஜ்க் ஆன் ஜீயில் 87 ஆவது டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி நடைபெற்றுள்ளது. அப்போட்டியில் மாஸ்டர்ஸ் பிரிவில் நம் நாட்டை இளம் செஸ் சாம்பியவான்கள் குகேஷ் மற்றும் பிரக்ஞானந்தா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். மாஸ்டர்ஸ் பிரிவின் 12 பிரிவுகளின் இறுதியில் தலா இருவரும் 8¹/² புள்ளிகள் எடுத்து முன்னிலை வகித்துள்ளனர். குகேஷ், அர்ஜுன் எரிகைஷீக்கு எதிராக தோல்வியடைந்துள்ளார். மாஸ்டர் பிரக்ஞானந்தாவும் ஜெர்மன் வீரரான வின்சென்ட் கீமர் எதிராக தோற்கடித்தனர்.

அதனை தொடர்ந்து இவ்விருவரும் சம புள்ளிகளில் முதலிடம் வகித்துள்ளனர். எனவே இவ்விருவருக்கும் இடையே டை ப்ரைக்கர் முறை பின்பற்றப்பட்டு உள்ளது. டைப்ரைக்கர் சுற்றை துல்லியமாக பயன்படுத்திக் கொண்டார் பிரக்ஞானந்தா. கடைசியில் குகைஷை வீழ்த்தியுள்ளார் பிரக். டாட்டா ஸ்டீல் மாஸ்டர் செஸ் 2025 வின்னரானார் பிரக்ஞானந்தா. மீண்டும் தனது வெற்றியை பதித்துள்ளார் இவர். இவரது வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிகளில் இதுவும் முக்கியமான ஒன்று.