இதய நோய் பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறிய ஒரு எளிய சோதனை!!

Photo of author

By Janani

நமது உடம்பிலேயே மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு என்றாலே நம் இதயத்தை தான் கூற வேண்டும். தாய்மார்கள் அனைவரும் தனது கருவில் இருக்கும் குழந்தையின் இதயத்துடிப்பை தான் கேட்க விரும்புவார்கள். இவ்வாறு ஒரு குழந்தையின் கரு முதல் ஒருவர் இறக்கும் வரையிலும் மிகவும் முக்கியமான ஒரு உறுப்பாக இதயம் தான் திகழ்கிறது.

நமது இதயத்தில் இருந்து தான் அனைத்து உறுப்புகளுக்கும் ரத்தமானது செல்கிறது. ஆனால் அந்த இதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தமானது நல்ல விதமாக சென்றால் தான் இதயமானது தனது வேலைகளை செய்ய முடியும். இதயத்திற்கு ரத்தம் செல்லும் முறையை தான் CORONARY ARTERIES என்று கூறுகிறோம். பொதுவாக அனைவருக்கும் ஒரு விதமான பயம் இருக்கும் நமது இதயம் நன்றாக வேலை செய்கிறதா, ரத்தம் சரியாக பகிரப்பட்டு வருகிறதா என்றெல்லாம் யோசிப்போம். நமது சந்தேகங்களை தீர்ப்பதற்கான வழிமுறையை தான் தற்போது காணப்போகிறோம்.

1. நமது தொண்டையின் இரண்டு புறமும் உள்ள CAROTID ARTERIES ல் ஏதேனும் ஒரு பிரச்சனையோ அல்லது அடைப்போ இருந்தால் கண்டிப்பாக நமது இதயத்தில் பிரச்சனை உள்ளது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

2.நெஞ்சு வலி ஏற்படும் பொழுது ஒரு யானை நம் மீது ஏறி நின்றால் எவ்வாறு வலிக்குமோ அந்த அளவிற்கு வலிக்கிறது என்றால் அது உண்மையான மாரடைப்பு என்று கூறுகின்றனர்.

3.நெஞ்சு வலி வரும்பொழுது இடது கை, இடது தாடை, வயிறு, முதுகு அல்லது வலது கைகளில் ஒரு விதமான மருத்துபோன வழிபரவும். அவ்வாறு வலியானது பரவுகிறது என்றால் அதுவும் உண்மையான மாரடைப்பு என்று கூறுகின்றனர்.

4.நெஞ்சு வலி வரும் பொழுது குளிர்ச்சியுடன் கூடிய வியர்வை, வாந்தி வருவது போன்ற உணர்வு போன்றவை ஏற்பட்டாலும் உண்மையான மாரடைப்பு என்று கூறுகின்றனர்.

5.நெஞ்சு வலி வரும் பொழுது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டாலும் உண்மையான மாரடைப்பு என்கின்றனர்.

6. நெஞ்சு வலியுடன் கூடிய அதிகப்படியான படபடப்பு தன்மை இருந்தால் அதுவும் மாரடைப்பு என்று கூறுகின்றனர்.

7. நெஞ்சு வலி ஏற்படும் பொழுது மயக்கம் வருவது போன்றோ, தலை சுற்றுவது போன்றோ உணர்வு ஏற்பட்டால் அதுவும் மாரடைப்பு என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதயத்தில் இருந்து தான் நரம்புகளின் மூலம் ரத்தம் ஆனது அனைத்து உறுப்புகளுக்கும் பரவுகிறது. எனவே தான் இத்தகைய வலிகள் ஏற்படும் போது அதனை நாம் உணர்ந்து மாரடைப்பு என்று அறிந்து கொள்ள முடியும். ஆனால் சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த நரம்புகளானது பாதிக்கப்பட்டு வலியானது ஏற்படாமலே மாரடைப்பினால் உயிரிழக்க நேரிடும். இதனைத் தான் சைலண்ட் ஹார்ட் அட்டாக் என்று கூறுகின்றனர். மேலும் சிலர் தூக்கத்திலேயே மாரடைப்பு வந்து இறந்து விட்டதாக கூறுவதற்கும் இதுதான் காரணம்.