உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதால் இரத்த குழாய் அடைப்பு ஏற்படுகிறது.இதனால் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் போகும் அபாயத்தை சந்திக்க நேரிடும்.தற்போதைய மோசமான உணவுப் பழக்கங்களால் தான் இரத்த குழாய் அடைப்பு பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இரத்த குழாய் அடைப்பு அறிகுறிகள்:-
1)பக்கவாதம்
2)அடிக்கடி தலைசுற்றல்
3)உடல் களைப்பு
4)சுவாசப் பிரச்சனை
5)நெஞ்சு வலி
6)கீழ் முதுகு வலி
7)ஆண்களுக்கு விறைப்புத் தன்மை
8)கை,கால் வலி
இரத்த குழாய் அடைப்பு குணமாக வீட்டு வைத்தியம்:-
1)வெந்தயம்
இரத்த குழாய் அடைப்பு குணமடைய வெந்தயத்தை மருந்தாக பயன்படுத்தலாம்.வெந்தயத்தில் கால்சியம்,மெக்னீசியம்,தாதுக்கள் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது.
வெந்தய விதைகளை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் பாலூட்டும் தாய்மார்களின் பால் சுரப்பு அதிகரிக்கும்.
வெந்தய விதையை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் வெந்தயத்தை பொடித்து சாப்பிட்டால் பலன் கிடைக்கும்.
அல்சர் புண்களை ஆற்றும் மருந்தாக வெந்தயம் திகழ்கிறது.இதை பொடித்து மோரில் கலந்து குடித்தால் குடல் ஆரோக்கியம் மேம்படும்.உடல் சூடு,வயிறு வலி போன்றவற்றை குணப்படுத்த வெந்தயத்தை சாப்பிடலாம்.நீரிழிவு நோயாளிகள் வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் ஆயுசுக்கும் மாத்திரை சாப்பிட வேண்டிய அவசியம் ஏற்படாது.
இரத்த குழாய் அடைப்பு குணமாக வெந்தயத்தை வறுத்து பொடித்து தினமும் தேநீர் செய்து பருகி வரலாம்.
இரத்த குழாய் அடைப்பை சரி செய்யும் வெந்தய தேநீர் தயாரிக்கும் முறை:-
தேவையான பொருட்கள்:-
1)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
**முதலில் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை கடாயில் போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ள வேண்டும்.
**பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அடுத்து அரைத்த வெந்தயத் தூளை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
**இந்த வெந்தய பானத்தை வடிகட்டி பருகி வந்தால் இரத்த குழாய் அடைப்பு சரியாகும்.ஆனால் ஒவ்வாமை,வயிற்றுப்போக்கு,குமட்டல் போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் அதிகளவு வெந்தயத்தை உட்கொண்டால் கடுமையான பக்கவிளைவுகளை சந்திக்கநேரிடும்.