பெண்களே மாதவிடாய் காலத்தில் முருங்கை பூவை இப்படி சாப்பிட்டால்.. கருமுட்டை வளர்ச்சி தாறுமாறாக அதிகரிக்குமாம்!!

Photo of author

By Divya

இன்று பல பெண்கள் கருமுட்டை வளர்ச்சி குறைவால் குழந்தையின்மை பிரச்சனையை சந்தித்து வருகின்றனர்.இயற்கையான முறையில் கருமுட்டை வளர்ச்சியை அதிகரிக்க இந்த வீட்டு வைத்தியங்களை பின்பற்றவும்.

தேவையான பொருட்கள்:-

1)முருங்கை பூ – இரண்டு தேக்கரண்டி
2)பசும் பல் – ஒரு கிளாஸ்
3)தேன் / பனங்கற்கண்டு – சிறிதளவு

செய்முறை விளக்கம்:-

1.முதலில் இரண்டு தேக்கரண்டி முருங்கை பூவை ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

2.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் அளவிற்கு பசும் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு சுத்தம் செய்து வைத்துள்ள முருங்கை பூவை அதில் போட்டு மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

3.பிறகு இந்த முருங்கை பூ பாலை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.அதன் பிறகு இனிப்பு சுவைக்காக ஒரு தேக்கரண்டி தேன் அல்லது சிறிது பனங்கற்கண்டு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து பருகலாம்.இந்த முருங்கை பூ பாலை மாதவிடாய் காலத்தில் பருகி வந்தால் கருமுட்டை வளர்ச்சி அதிகரிக்கும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

1)கருப்பு எள் – ஒரு தேக்கரண்டி
2)தேங்காய் துருவல் – ஒரு கப்
3)நாட்டு சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு – தேவைக்கேற்ப

செய்முறை விளக்கம்:-

1.முதலில் கருப்பு எள் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து வாணலியில் போட்டு லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை ஆறவைத்து மிக்சர் ஜாரில் கொட்டி பவுடராக பொடித்துக் கொள்ள வேண்டும்.

2.பிறகு ஒரு கப் தேங்காய் துருவலை மிக்சர் ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த தேங்காய் பாலை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி கொள்ள வேண்டும்.

3.பிறகு இதை அடுப்பில் வைத்து குறைவான தீயில் சூடுபடுத்த வேண்டும்.அடுத்து அரைத்த எள்ளு பொடியை கொட்டி குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

4.இந்த பாலை ஒரு கிளாஸிற்கு ஊற்றி தேவையான அளவு நாட்டு சர்க்கரை சேர்த்து பருக வேண்டும்.மாதவிடாய் காலத்தில் இந்த பாலை பருகினால் கருப்பையில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறிவிடும்.இதன் காரணமாக கருமுட்டை வளர்ச்சி அதிகரிக்கும்.